கண்ணோட்டம்

வரலாறு

இந்து இளையர் கட்டமைப்பு (சிங்கப்பூர்) ஏப்ரல் 10ஆம் தேதி 2020ஆம் ஆண்டில் தோற்றம் கண்டது. 18 வயது முதல் 35 வயது நிரம்பிய இந்து இளையர்களை கொண்டு வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இக்குழு உருவானது. இந்து சமயத்தைப் பற்றி ஆழமாக அறிந்துகொண்டு, அன்றாட வாழ்க்கையில் சமய நன்னெறிகளின் பயன்பாட்டில் எவ்வாறு நல்ல சமயம் சார்ந்த தெரிவுகளை செய்வது குறித்து குழு உதவும்.

நமது அடையாளம்

குழுவின் சின்னத்தில் இடம்பெறும் வட்டங்கள்  இந்து இளையர்களுக்கிடையே இருக்கும் பிணைப்பை பிரதிபலிக்கிறது. இது அனுபவங்கள், தகவல்கள், கருத்துகள் ஆகியவற்றை பகிர்ந்துகொள்வதன் மூலம் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையில் குழு இயங்குகிறது.

நமது முக்கிய திட்டங்கள், ஈடுபாடு
 • இந்து இளையர் முகாம்

 

 • சமய நல்லிணக்க திட்டங்கள் 

 

 • சமூக சேவை திட்டங்கள் ( உதாரணத்திற்கு, சிண்டா ‘புரோஜெக்ட் கிவ்’ திட்டம், பண்டிகை அன்பளிப்பு பை விநியோகம்)

 

 • சமய நல்லிணக்கத்தை வளர்க்க, மற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வது. இந்து சமயத்தைப் பற்றி மற்ற இனத்தவருடன் பகிர்ந்துகொள்வது.

 

 • சமயம் தொடர்பான ஆய்வும், படைத்தலும்.
இந்து சமயத்தைப் பற்றி ஆராய, எங்களோடு இணைக

ஃபேஸ்புக் பக்கம்:

https://www.facebook.com/hinduyouthnetworksg

இன்ஸ்டாகிராம் பக்கம்:

https://www.instagram.com/hinduyouthnetworksg/

தொண்டூழியர்

இந்து இளையர் கட்டமைப்பில் தொண்டூழியராக சேருங்கள்

நீங்கள் 18 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்ட இந்து இளையராக இருந்தால் குழுவுடன் தொண்டூழியம் புரிய முன்வரவும். ஆய்வில் ஈடுபடுவது, சமயம் தொடர்பான சமூக வலைத்தள பதிவுகளை பதிவேற்றம் செய்தல்,சமய நல்லிணக்க அல்லது சமூக சேவை திட்டங்களை ஏற்பாடுச் செய்தல் போன்ற நடவடிக்கைகளில் நீங்கள் தொண்டூழியராக ஈடுபடலாம்.

இந்து இளையர் கட்டமைப்பில் தொண்டூழியராக சேரும் பலன்கள்
 • இந்து சமயத்தைப் பற்றி இன்னும் ஆழமாக தெரிந்துகொள்ளலாம்
 • திறன்களை வளர்த்துக்கொண்டு சமூகத்திற்கு பங்களித்தவாறு தொண்டூழிய அனுபவம் பெறலாம்.
 • புதிய நண்பர்களை சந்தித்து, ஒரே சிந்தனையோட்டத்தைக் கொண்ட நபர்களுடன் இணையலாம்.
 • உங்கள் திறன், அனுபவம், பின்னணி அல்லது எவ்வளவு நேரம் தொண்டூழியத்திற்கு  உங்களால் ஒதுக்க முடியும் என்பது முக்கியம் இல்லை.
 • உங்களின் நேர வசதிக்கு ஏற்ப,பெரும்பாலான தொண்டூழியப் பணியை நீங்கள் வீட்டிலிருந்தவாறே செய்யலாம்!
 • இந்து இளையர் கட்டமைப்பில் ஈடுபட விரும்பினால்,  உடனடியே உறுப்பினராக பதிவு செய்யவும்.