திட்டம் பற்றி

“விவாகம் – இந்துத் தம்பதியருக்கான திருமண ஆயத்தத் திட்டம்”, இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்யும் ஒரு திட்டமாகும். இத்திட்டம், திருமணம் செய்துகொள்ளவிருக்கும் தம்பதியர், பாரம்பரியத் திருமணத்தில் உள்ள இந்து சடங்குகளின் அர்த்தம், இளம் குடும்பமாக நிதிகளை நிர்வகிக்கும் முறை, குடும்பங்களின் பழக்க வழக்கங்களை சமாளித்தல் ஆகியவை பற்றிப் புரிந்துகொள்ளத் துணைபுரியும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
2013-ஆம் ஆண்டில், இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து நிலையமும் ஒன்றிணைந்து திருமண ஆயத்தத் திட்டத்தை, இந்து மதக் கூறுகளைக் கொண்டு நடத்தத் தொடங்கிய வரையில், இந்துக்களுக்காகத் திட்டமிடப்பட்ட திருமணத்திற்கு முந்திய திட்டங்கள் ஏதும் இருந்ததில்லை. 

ஒன்றரை நாள் நீடிக்கும் இத்திட்டம், இந்துச் சமூகத்தில் நடைபெறும் திருமணங்களை மேம்படுத்தும் வகையில், இத்தகு திருமணங்களுடன் தொடர்புடைய மதச் சார்புடைய, மதச் சார்பற்ற அம்சங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், இத்தகைய அம்சங்களில் நிபுணத்துவம் கொண்ட நிபுணர்களால் வழிநடத்தப்படுகிறது.

 

திட்டத்தில் விவரிக்கப்படும் அம்சங்கள்

மதச் சார்பற்ற அம்சங்கள்*

  • குடும்பத்தின் கூறுகள் பற்றிப் புரிந்துகொள்ளுதல்
  • குடும்ப விழுமியங்கள்
  • ஆக்கக்கரமான தொடர்பு முறைகள்
  • திருமண பந்தம்
  • பொறுப்புகளும் பொறுப்புணர்வுகளும்
  • நிதித் திட்டமிடுதல்

மதச் சார்புடைய அம்சங்கள்*

  • திருமணம் பற்றிய கூறு
  • திருமணத்தில் அறம், கர்மம்
  • மதம் சார்ந்த வேற்றுமைகளை நிர்வகித்தல்
  • திருமணத்தில் உள்ள குறிப்பிட்ட சடங்குகளைப் புரிந்துகொள்ளுதல்

மதச் சார்புடைய, மதச் சார்பற்ற அம்சங்கள் இரண்டையும் ஒருங்கிணைப்பதால், தம்பதியருக்கு இது வளமானதொரு தளத்தை அமைத்துக் கொடுக்கின்றது. இத்தகைய அம்சங்களில் உள்ள மாயைகளைப் பொய்யாக்கி, அவற்றுக்கு உரித்தான போதனைகளை மேம்பட்ட வகையில் உணர்ந்துகொள்ள, இத்திட்டம் வழிவகுக்கின்றது.

*திட்டத்தில் விவரிக்கப்படும் அம்சங்கள் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படலாம்

எதிர்வரும் நிகழ்ச்சி

நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் சார்ந்த நடவடிக்கைகளின் காரணமாக, ஏப்ரல் 2021-இல் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த திருமண ஆயத்தத் திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். 

ஆண்டுதோறும் நடத்தப்படும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்களுக்கு தங்கள் சேவைகளை தன்னார்வத் தொண்டு செய்ய ஆர்வமுள்ள எவரையும் இந்து எண்டோவ்மென்ட் வாரியம் வரவேற்கிறது.

கீழே பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு வாரிய நடவடிக்கைகளுக்கும் நீங்கள் தன்னார்வத் தொண்டு செய்ய விரும்பினால், தொலைபேசியில் நிர்வாக மேலாளரைத் தொடர்பு கொள்ளவும்: 6296 3469 .

மாற்றாக, வாரியத்தால் நிர்வகிக்கப்படும் கோயில்களில் ஏதேனும் ஒரு சமய நிகழ்வுகள் அல்லது பண்டிகைகளுக்கு உங்கள் சேவைகளை வழங்க விரும்பினால், தயவுசெய்து கோயில்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

பின்வரும் பகுதிகளில் எங்களுக்கு உதவக்கூடிய நபர்களையும் நாங்கள் தேடுகிறோம். நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளும்போது, நீங்கள் ஆர்வமுள்ள பங்கேற்பு பகுதியைக் குறிக்கவும்:

தேசிய நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகளுக்கு:

~|spoon~|font-awesome~|solid

உணவு விநியோகம்

~|truck~|font-awesome~|solid

தளவாடங்கள்

~|security~|material~|solid

பாதுகாப்பு

~|users~|font-awesome~|solid

மார்ஷலிங்