கண்ணோட்டம்

இந்து அறக்கட்டளை வாரியம், 1968-ஆம் ஆண்டில், இந்து அறக்கட்டளைகள் சட்டத்தின் கீழ் நிறுவப்பெற்ற, அரசு ஆணைபெற்ற ஓர் அமைப்பாகும்.   அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டதற்கு இணங்க, வாரியத்தின் பணி, அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள அறக்கட்டளைகளை நிர்வகிப்பதே ஆகும்.

சட்டத்தில் இடம்பெறும் “அறக்கட்டளை” எனும் சொல், இந்துக் கோயில் அல்லது பிற இந்து சடங்குகளுக்கு ஆதரவாக, நிலம், கட்டடம் அல்லது பணம் ஆகியவற்றின் பேரில் வழங்கப்பெறும் அறக்கட்டளையைக் குறிக்கின்றது.   வாரியம் நிர்வகிக்கும் அறக்கட்டளைகள் பின்வருமாறு:

ஸ்ரீ மாரியம்மன் கோயில்

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்

ஸ்ரீ சிவன் கோயில்

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில்

மேற்குறிப்பிட்ட சட்டத்தின் கீழ், சிங்கப்பூரில் உள்ள அனைத்து இந்து அறக்கட்டளைகளின் (வாரியத்தின் நிர்வாகத்திற்கு உட்படாத அறக்கட்டளைகள் உள்ளிட்ட) வரவுசெலவுக் கணக்கைக் கண்காணிக்கும் அதிகாரம், இந்து அறக்கட்டளை வாரியத்திற்கு உண்டு.   அறக்கட்டளையை நிர்வகிக்கும் எந்தவொரு நபராக இருப்பினும், இந்து அறக்கட்டளை வாரியம் கேட்டுக்கொள்வதன் பேரில், வாரியத்தின் முன்னிலையில் தோன்றி, அறக்கட்டளைகள் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளித்தாகவேண்டும்.

கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சரால் நியமிக்கப்படும் ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், ஒரு பொருளாளர், 12 உறுப்பினர்கள் ஆகியோர் இந்து அறக்கட்டளை வாரியத்தில் இடம்பெற்றிருப்பர்.   அவ்வாறு நியமிக்கப்படும் நபர்கள், சிங்கப்பூரராகவும் இந்துவாகவும் இருக்கவேண்டும்.   இத்தகு நியமனங்கள் ஒவ்வொன்றும், மூன்று ஆண்டு காலத்திற்கு நீடிக்கும்.   பொதுத் துறையைச் சேர்ந்த ஓர் அதிகாரியை, அமைச்சர் வாரியத்தின் செயலாளராக நியமிப்பார்.

நான்கு கோயில்களை நிர்வகிப்பது தவிர, வாரியம் ஆஷ்ரம் போதையர் மறுவாழ்வு இல்லம் ஒன்றையும் நிர்வகித்து வருகின்றது. தைப்பூசம், தீமிதித் திருவிழா போன்ற பிரதான இந்து விழாக்களையும் வாரியம் ஏற்பாடு செய்கின்றது.

வாரியம், சமூக சேவையில் கொண்டுள்ள ஈடுபாடு, விரிவானது. ஆண்டுதோறும், இலவச மருத்துவ ஆலோசனையும் சுகாதாரப் பரிசோதனைகளும் வழங்கும் சுகாதார விழா நடத்தப்பட்டு வருகிறது. சிவதாஸ் – இந்து அறக்கட்டளை வாரிய கல்வி நிதியின் மூலம், வசதி குறைந்த இந்து மதம் சார்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்படுகிறது. வாரியத்தின் ‘நெஞ்சார்ந்த அன்பளிப்பு’ (Gift from the Heart) திட்டத்தின் மூலம், வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவும் வகையில், மாதந்தோறும் மளிகைப் பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன

பிற மதங்களுக்கு இடையிலான நடவடிக்கைகளையும் வாரியம் துடிப்பாக ஆதரித்து வருகின்றது. மதங்களுக்கு இடையிலான சிங்கப்பூர் அமைப்பிலும், வாரியம் உறுப்பினத்துவம் கொண்டுள்ளது.

ஆண்டுதோறும் நடத்தப்படும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்களுக்கு தங்கள் சேவைகளை தன்னார்வத் தொண்டு செய்ய ஆர்வமுள்ள எவரையும் இந்து எண்டோவ்மென்ட் வாரியம் வரவேற்கிறது.

கீழே பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு வாரிய நடவடிக்கைகளுக்கும் நீங்கள் தன்னார்வத் தொண்டு செய்ய விரும்பினால், தொலைபேசியில் நிர்வாக மேலாளரைத் தொடர்பு கொள்ளவும்: 6296 3469 .

மாற்றாக, வாரியத்தால் நிர்வகிக்கப்படும் கோயில்களில் ஏதேனும் ஒரு சமய நிகழ்வுகள் அல்லது பண்டிகைகளுக்கு உங்கள் சேவைகளை வழங்க விரும்பினால், தயவுசெய்து கோயில்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

பின்வரும் பகுதிகளில் எங்களுக்கு உதவக்கூடிய நபர்களையும் நாங்கள் தேடுகிறோம். நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளும்போது, நீங்கள் ஆர்வமுள்ள பங்கேற்பு பகுதியைக் குறிக்கவும்:

தேசிய நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகளுக்கு:

~|spoon~|font-awesome~|solid

உணவு விநியோகம்

~|truck~|font-awesome~|solid

தளவாடங்கள்

~|security~|material~|solid

பாதுகாப்பு

~|users~|font-awesome~|solid

மார்ஷலிங்

வாரிய உறுப்பினர்கள், இந்திய சமூகத்தைச் சேர்ந்த, பொது – தனியார் துறைகளில் முன்னணி வகிக்கும் பிரபலமான நபர்களிடத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சிங்கப்பூர் மதம் சார்ந்த நிகழ்வுகளின் வளர்ச்சிக்கும் ஊக்குவிப்பிற்கும் தேவையான கொள்கைகளையும் உத்திகளையும் மேற்பார்வையிடுவது தவிர, உறுப்பினர்கள், இந்துக் கோயில்கள், முக்கியமான திட்டப்பணிகள், திட்டங்கள் ஆகியவற்றைத் திட்டமிட்டு செயல்படுத்துவதிலும் ஆலோசனை வழங்குவார்கள். கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர், பின்வரும் நபர்களை, 31 மே 2026 வரை, இந்து அறக்கட்டளை வாரியத்தின் உறுப்பினர்களாக நியமித்துள்ளார்.

தலைவர்

திரு ராஜன் கிருஷ்ணன்

துணைத் தலைவர்

இணைப் பேராசிரியர் நாராயணன் கணபதி

பொருளாளர்

திரு J பாலசுப்ரமணியம்

செயலாளர்

திரு சதிஷ் S/O அப்பு

உறுப்பினர்

திரு S லக்ஷ்மணன்

திரு A யோகநாதன் 

திரு V செல்வம்
திரு N புருஷோத்தமன்

திரு கிருஷ்ணன் முத்தப்பன்

Dr L ஜெயராம்

திரு C குணசேகரன்

திரு விஜய்குமார் சேதுராஜ்

திரு ரன்வீர் குமார் சிங்
திரு ரமேஷ் செல்வராஜ்
திரு கந்தவேள் s/o பெரியசாமி

1985-ஆம் ஆண்டில், இந்து மதம், சடங்குகள் ஆகியவை பற்றி அரசாங்கத்திற்கும் இந்து அறக்கட்டளை வாரியத்திற்கும் அறிவுறுத்தவேண்டி, இந்து ஆலோசனை வாரியம் தோற்றுவிக்கப்பட்டது. இந்து ஆலோசனை வாரியம், அரசமைப்புச் சட்டத்தின் ஒன்றின் வரையறைகளுக்கு உட்பட்ட வண்ணம் செயல்படுகிறது. தலைவர், துணைத் தலைவர், செயலாளர், 9 உறுப்பினர்கள் ஆகியோர் இந்து ஆலோசனை வாரியத்தில் இடம்பெற்றிருப்பார்கள். இந்து ஆலோசனை வாரியத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரால் நியமிக்கப்படுவார்கள். பின்வரும் நபர்கள், 31 மே 2026 வரை, இந்து அறக்கட்டளை வாரியத்தின் உறுப்பினர்களாக சேவையாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைவர்: 

திரு K செங்குட்டுவன்

துணைத் தலைவர்:

குமாரி பாலகிருஷ்ணன் மதுபாலா

செயலாளர்:

திரு கண்ணா கண்ணப்பன்

உறுப்பினர்:

திருமதி சுசிலா கணேசன்
திரு N R சங்கர்
திரு தினேஷ் வாசு
திருமதி அகிலா விஜய் அய்யங்கார்

திரு M V ராஜசேகரன்

திரு T P சண்முகம்
திரு R ராஜாராம்
திரு கவுதம் நரசிம்மன்
திரு சிவகுமரன் s/o கோவிந்தசாமி