ஸ்ரீ சிவன் கோயில்

ஸ்ரீ சிவன் கோயில், 1850-களின் தொடக்கத்தில் ஒரு கட்டடமாக மறுநிர்மாணம் செய்யப்பட்டதாகக் குறிப்புகள் பதிவாகியுள்ளன. ஆர்ச்சர்ட் ரோட்டில், தற்போது டோபி காட் பெருவிரைவு போக்குவரத்து இரயில் நிலையம் அமைந்துள்ள பகுதியில், கோயில் அமையப் பெற்றிருந்தது. 1850-ஆம் ஆண்டிற்கு முன்னரும் கூட, இக்கோயிலில் இருந்த சிவலிங்கம் வழிபட்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்தக் கோயிலில் வீற்றிருக்கும் சிவலிங்கம், சிங்கப்பூருக்குள்ளேயே மூன்று முறை இடம் மாறியுள்ளது – பொத்தோங் பாசிர் வட்டாரத்திலிருந்து டோபி காட் வட்டாரத்தின் மறுமுனைக்கு; பின்னர், தற்போது மெக்டோனல்ட்ஸ் ஹவுஸ் அமைந்திருக்கும் பகுதிக்கு; அதன்பின்னர், ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள ஓர் இடத்திற்கு.   அங்குதான் இக்கோயில், 1983-ஆம் ஆண்டு வரை இருந்து வந்தது.

ஸ்ரீ சிவன் கோயிலை, மொஹமதிய  இந்து அறக்கட்டளை வாரியத்தின் (1907-ஆம் ஆண்டில் நிறுவப்பெற்றது) நிர்வாகத்திற்கு உட்படுத்தும் ஆணை ஒன்று, 18 அக்டோபர் 1915 அன்று அரசிதழில் பதிப்பிக்கப்பட்டது. 1968-ஆம் ஆண்டில், ஸ்ரீ சிவன் கோயில் உள்ளிட்ட நான்கு கோயில்களை நிர்வகிப்பதற்காக, இந்து அறக்கட்டளை வாரியம் தோற்றுவிக்கப்பட்டது.

மேலும் அறிய

இரண்டாம் உலகப் போரின் போது, கோயிலில் உள்ள சிவலிங்கம் அல்லாத பிற தெய்வங்களின் சிற்பங்கள் சிலவும், கோயில் கட்டடத்தின் ஒரு பகுதியும், அதனைச் சுற்றி எறியப்பட்ட வெடிகுண்டுகளின் காரணமாக சேதமடைந்தன. போர்க்கால இறுதியில், கோயில் புதுப்பிக்கப்பட்டு, ஜூலை 1943-இல் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. 1954-ஆம் ஆண்டில், ஆர்ச்சர்ட் ரோட்டின் விரிவாக்கப் பணிகளின் காரணமாக, கோயில் 14 அடி பின்னால் நகர்த்தப்படவேண்டும் என்று நகராண்மை ஆணையர்கள் கேட்டுக்கொண்டனர். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், மொஹமதிய  இந்து அறக்கட்டளை வாரியமும் நகர மன்றமும் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டன. கோயில் அதன் முன்பகுதி நிலத்தில் 490 சதுர அடிப் பரப்பளவை $50,000-க்குக் கொடுக்கவேண்டும்.   அத்துடன், அதே இடத்தில் மீண்டும் கட்டப்படுவதற்கான அனுமதியும் கோயிலுக்கு வழங்கப்பட்டது. கோயிலை மீண்டும் கட்டுவதற்கான திட்டங்கள், 1957-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. ஏப்ரல் 1962 வரை, உள்ளூர் ஒப்பந்ததாரர்கள், கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தனர். அதன்பின்னர், இந்தியாவிலிருந்து கைதேர்ந்த சிற்பக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, சிற்ப, அலங்கார வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 9 டிசம்பர் 1964 அன்று, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

1983-ஆம் ஆண்டில், கோயில் அமைந்திருந்த நிலத்தை கையகப்படுத்திக்கொள்ள அரசாங்கம் முடிவெடுத்தது. அங்கு, பூமிக்கு அடியில் பெருவிரைவு இரயில் போக்குவரத்து நிலையம் ஒன்று கட்டப்படவிருந்தது. ஆக, மேலும் ஏற்புடைய, நிரந்தர இடம் ஒன்று அடையாளம் காணப்படும் வரையில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கு அருகில் இடைக்கால ஏற்பாடாக தற்காலிகக் கோயில் ஒன்று கட்டப்பட்டது. ஆர்ச்சர்ட் ரோடு கோயிலில் இருந்த அனைத்து தெய்வங்களும், சிராங்கூன் ரோட்டில் உள்ள புதிய, தற்காலிக இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதன்மூலம், அன்றாட வழிபாடுகளும் விழாக்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. புதிய கோயிலை தோற்றம், சிறப்புத் தன்மைகள், வசதிகள் ஆகிய வகையில் தனித்துவம் வாய்ந்த ஒன்றாக உருவாக்க, இந்து அறக்கட்டளை வாரியம் முடிவெடுத்தது. வாரியமும் கோயில் நிர்வாகக் குழுவும், இந்தியாவில் உள்ள பிரபல கோயில் வடிவமைப்பாளர்களைக் கலந்து ஆலோசித்தது. அதன் விளைவாகப் பிறந்தது, தனித்துவம் வாய்ந்த ஒரு வடிவமைப்பு – எண்கோண வடிவிலான ஒரு கட்டடம். புதிய கோயில், கேலாங் ஈஸ்ட் வட்டாரத்தில், 3,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் $6 மில்லியன் செலவில் கட்டப்பட்டது. கோயிலின் புதிய இடம், ஆர்ச்சர்ட் ரோட்டில் முன்னர் இருந்த இடத்தைக் காட்டிலும், சுமார் நாலரை மடங்கு அதிகம். சுமார் பத்து ஆண்டு, சிராங்கூன் ரோட்டில் தர்காலிகமான ஓர் இடத்தில் இருந்த பின்னர், 30 மே 1993 அன்று, ஸ்ரீ சிவன் கோயில், கேலாங் ஈஸ்டில் உள்ள, அதன் தற்போதைய இடத்தில் கும்பாபிஷேகம் கண்டது.

இக்கோயிலில் கொண்டாடப்படும் பிரதான விழாக்களில் சில, மஹா சிவராத்திரி, குருபெயர்ச்சி ஆகியவை ஆகும்.

கோயில் திறக்கும் நேரம்

 

திங்கள் முதல் ஞாயிறு வரை
காலை 5:00 மணி முதல் 11:00 மணி வரை
மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை

அர்ச்சனை சேவைகள் தினமும் காலை 11.15 மணிக்கும் இரவு 8.15 மணிக்கும் நிறைவுபெறும்.

தினசரி நிகழ்வுகள்

[diec_event_carousel show_name=”off” included_categories=”25″ excerpt_length=”80″ columns=”2″ image_align=”rightimage_leftdetail” arrow_backgound_color=”#fa7603″ event_inner_spacing=”30px|30px|30px|30px|true|true” arrows_custom_color=”#FFFFFF” dot_nav_active=”#fa7603″ disabled_on=”on|on|on” _builder_version=”4.9.3″ _module_preset=”default” title_font=”|700|||||||” title_font_size=”35px” title_line_height=”1.2em” duration_font=”||||||||” duration_font_size=”22px” duration_line_height=”1.5em” excerpt_font=”||on||||||” excerpt_font_size=”18px” excerpt_line_height=”1.5em” border_radii_thumbnail_border=”on|10px|10px|10px|10px” border_radii_event_border=”on|5px|5px|5px|5px” border_width_all_event_border=”2px” border_color_all_event_border=”#fa7603″ disabled=”on”][/diec_event_carousel]
No event found!

தெய்வங்கள்

சேவைகள்

சேவைகள் விலை
சிறப்பு அபிஷேகம் / பூஜை
கூடுதல் சுவாமிகள் (ஒன்றுக்கு)
$ 131
$ 71
சந்தனக் காப்பு முழுமையாக (ஒவ்வொறு சுவாமிக்கும்)
சந்தனக் காப்பு சுவாமி முகம் மட்டும் (ஒவ்வொறு சுவாமிக்கும்)
$ 131
$ 61
ஹோமம் (ஒவ்வொறு சுவாமிக்கும்) (இரு வகை பிரசாதம் வழங்கப்படும்) $ 251
முருகனுக்கு சத்ரு சம்ஹார திரிசதி பூஜை $ 251
நவக்கிரக ஹோமம் (9 வகை பிரசாதம் வழங்கப்படும்) $ 351
ருத்ரா அபிஷேகம் $ 351
சங்காபிஷேகம் $ 351
ஆயுஷ்ய ஹோமம் $ 301
மிருத்யுஞ்சய ஹோமம் $ 301
சுதர்சன ஹோமம் $ 401
108 கலசாபிஷேகம் $ 451
ஷண்முகார்ச்சனை $ 501
முடிக்கயிறு $ 3
மார்கழி திருப்பள்ளி எழுச்சி பூஜை $ 61
புதிய வாகனப் பூஜை $ 35
உச்சிகாலம் / அர்தஜாம சிறப்புப் பூஜை $ 51
பிறந்த குழந்தைக்கு 30வது நாள் பிரார்த்தனை $ 51
குழந்தை தத்தம் $ 51
நாமகரணம் (குழந்தைக்குப் பெயர் வைத்தல்) $ 51
அன்னபிராசனம் (குழந்தைக்கு முதல் சோறு ஊட்டுதல்) $ 51
வித்யாரம்பம் (தனிப்பட்ட முறையில் செய்வதற்கு) $ 51
ஹிரண்ய சிரார்த்தம் $ 51
சகஸ்ரநாம அர்ச்சனை $ 40
அமாவாசை தர்ப்பணம் $ 5

நிர்வாகக் குழு

தலைவர் திரு யோகநாதன் அம்மையப்பன்
துணைத் தலைவர் குமாரி சுசீலா கணேசன்
செயலாளர் திரு கலையரசன் K
பொருளாளர் திரு ராமசந்திரன் இந்திரமோகன்
உறுப்பினர்கள் திரு S கணேஷ்
திரு N அனந்தராஜா s/o நடராஜா
திரு கிருஷ்ணசாமி ராஜாராம்
திரு பிரசாந்த சாகா
திரு சேகரன் முத்தையா
திரு ராஜா ராமன்
திரு சுரேஷ் s/o முருகையா
திரு உதயகுமார் ரத்னம்

எங்களைத் தொடர்புகொள்ள:

24 கேலாங் ஈஸ்ட் அவின்யூ 2, சிங்கப்பூர் 389752

67434566