ஸ்ரீ மாரியம்மன் கோயில்

சிங்கப்பூரின் ஆகப் பழமையான இந்துக் கோயில், ஸ்ரீ மாரியம்மன் கோயில்.   தென் இந்தியாவின் நாகபட்டினம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த குடியேறிகளின் வழிபாட்டிற்காக, 1827-ஆம் ஆண்டில், ஸ்ரீ மாரியம்மன் கோயில் கட்டப்பட்டது.   ‘கிலிங் ஸ்டிரீட்’ என்றும் அது பரவலாக அழைக்கப்பெற்றது.   கிருமிப்பரவல் நோய்களைக் குணப்படுத்தும் சக்திக்காகப் பெயர் பெற்ற மாரியம்மனின் பெயரால் இந்தக் கோயில் அழைக்கப்படுகிறது.

சைனாடவுன் வட்டாரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள, இக்கோயிலின் இராஜகோபுரம், பல தலைமுறைகளைச் சேர்ந்த இந்து பக்தர்களுக்கும் சிங்கப்பூரர்களுக்கும் ஒரு பிரதான சின்னமாக வீற்றிருக்கின்றது.

மேலும் அறிய

ஸ்ரீ மாரியம்மன் கோயிலைக் கட்டுவதில் முனைப்பு காட்டியவர், திரு நாராயண பிள்ளை.   பினாங்கில் செயல்பட்டு வந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கிழக்கிந்தியக் கம்பெனியில், அவர் ஓர் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தார்.   1819-ஆம் ஆண்டில், சர் ஸ்டாம்ஃபோர்ட் இராஃபிள்ஸ் (நவீன சிங்கப்பூரைத் தோற்றுவித்தவர்) அவர்கள் சிங்கப்பூருக்கு மேற்கொண்ட இரண்டாவது வருகையின் போது, அவருடன் திரு பிள்ளையும் வந்ததாக அறியப்படுகிறது.   சிங்கப்பூரில் முதல் செங்கல் சூளையை நிறுவிய திரு பிள்ளை, அத்தொழிலில் தம்மை விரைவாக நிலைப்படுத்திக்கொண்டார்.   இந்திய சமூகத்தின் தலைவராகவும் அவர் அடையாளம் காணப்பட்டார்.

இந்துக் கோயிலுக்காக, கிழக்கிந்தியக் கம்பெனி முதன்முதலில் ஒதுக்கிய நிலப்பகுதி, தெலுக் ஆயர் ஸ்டிரீட்டில் அமைந்திருந்தது.   ஆனால், கோயிலின் சடங்கு சம்பிரதாயங்களுக்குத் தேவைப்படும் நீர் வசதி அங்கு இல்லாத காரணத்தால், கர்ணல் வில்லியம் ஃபார்க்கர் (சிங்கப்பூரின் முதல் (நியமிக்கப்பட்ட) குடியிருப்பாளர் & தளபதி, 1819 – 1823), இன்று ஸ்டாப்ஃபோர்ட் கால்வாய் அமைந்திருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள ஓர் இடத்தைப் பயன்படுத்திக்கொள்ள, திரு பிள்ளைக்கு அனுமதி வழங்கினார்.   காலனித்துவ நகரத் திட்டமைப்பில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களின் காரணமாக, ஸ்டாம்ஃபோர்ட் கால்வாய்க்கு அருகில் இருந்த நிலப் பகுதியும் பின்னர் வழங்கப்படவில்லை.   இறுதியில், 1823-ஆம் ஆண்டில், தற்போது கோயில் அமைந்திருக்கும் சவுத் பிரிட்ஜ் பகுதி (சைனாடவுன் வட்டாரத்தில்), திரு பிள்ளைக்கு வழங்கப்பட்டது.

1827-ஆம் ஆண்டிற்குள், மரத்தாலும் சருகுகளாலும் அமைக்கப்பெற்ற ஒரு கோயில், சவுத் பிரிட்ஜ் ரோட்டில் கட்டப்பெற்றது.   அப்போது, கோயில் முதன்முறையாக எழுப்பப் பெற்றபோது, ஸ்ரீ மாரியம்மனின் சிறிய விக்ரகம் (“சின்ன அம்மன்”), திரு நாராயண பிள்ளை அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.   இந்த விக்ரகம், இன்றும், இக்கோயிலில் இருப்பது, சுவாரஸ்யமான ஒரு தகவலாகும்.

1843-ஆம் ஆண்டில், முதன்முறையாக சுண்ணாம்புக் கலவையும் செங்கலும் கொண்டு ஒரு கட்டடம் எழுப்பப்பட்டது.   119 ஆண்டு கழித்து, 1962-ஆம் ஆண்டில்தான், இந்தியாவில் காணப்பெறும் கோயில் கட்டடக்கலையை ஒத்த, நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய கோயில் வடிவமைக்கப்பட்டது.   கோயில் முதல் இராஜகோபுரம், 1800-களின் பிற்பாதியில் கட்டப்பட்டது.   ஆனால், அதில் அலங்கார வேலைப்பாடுகள் அதிகம் இடம்பெறவில்லை.   1930-களில் மீண்டும் கட்டப்பெற்ற இராஜகோபுரம், 1960-களில் பழுதுபார்க்கப்பட்டு, மேலும் பல சிற்பங்களுடன் விரிவாகப் புதுப்பிக்கப்பட்டது.   கடந்து நூறாண்டில், கோயிலின் தோற்றம், பலதரப்பட்ட மறுமேம்பாட்டுப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

கோயிலின் வரலாற்றுக் குறிப்புகளில், முதல் கும்பாபிஷேகம் 1936-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.   அதற்கு முன்னர் கும்பாபிஷேகம் இடம்பெற்றதற்கான தகவல்கள் ஏதும் குறிப்புகளில் இல்லை.   12 ஆண்டு கழித்து, 1949-ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தில் இரண்டாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது.   இவற்றைத் தொடர்ன்டு, 6 ஜூன் 1971, 6 செப்டம்பர் 1984, 19 மே 1996 ஆகிய தினங்களில் அடுத்தடுத்த கும்பாபிஷேகங்கள் நடைபெற்றன.

காலனித்துவ ஆட்சிக் காலங்களில், ஸ்ரீ மாரியம்மன் கோயில், புதிய குடியேறிகளுக்கான புகலிடமாகத் திகழ்ந்தது.   சமூக நடவடிக்கைகளுக்கான முக்கிய இடமாக இக்கோயில் விளங்கியது.   மேலும், ஆலயங்கள் மட்டுமே இந்துத் திருமணங்களை அங்கீகரிக்ககூடிய சமயத்தில், இக்கோயிலே இந்துக்களுக்கான திருமணப் பதிவகமாகவும் செயல்பட்டு வந்தது.

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் கொண்டாடப்படும் பிரதான விழா, தீமிதித் திருவிழா.   ஆண்டுதோறும் அக்டோபர் / நவம்பர் மாதத்தில் இவ்விழா நடைபெறும்.   நவராத்திரி, ஆடி மாத பூஜை ஆகியவை, இக்கோயிலின் மற்ற முக்கியமான விழாக்கள்.

கோயில் திறக்கும் நேரம்

}~|icon_clock_alt~|elegant-themes~|outline

திங்கள் முதல் ஞாயிறு வரை
காலை 5:00 மணி முதல் காலை11:30 மணி வரை
மாலை 6:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை  (வெள்ளி மட்டும் இரவு 9.15 மணி)

அர்ச்சனை சேவைகள் தினமும் காலை 11.00 மணிக்கும் இரவு 8.15 மணிக்கும் (வெள்ளி மட்டும் இரவு 8.45 மணி)  நிறைவுபெறும்.

தினசரி நிகழ்வுகள் 

No event found!

தெய்வங்கள்

சேவைகள்

சேவைகள் விலை
சிறப்பு அபி‌ஷேகம் / பூஜை
கூடுதல் சுவாமிகள் (ஒன்றுக்கு)
$ 131
$ 71
சந்தனக் காப்பு (பெருமாள் கோயில் தவிர்த்து) முழுமையாக
(ஓவ்வொரு சுவாமிக்கும்)
$ 131
$ 61
ஹோமம் (ஒவ்வொரு சுவாமிக்கும்) (இரு வகை பிரசாதம் வழங்கப்படும்) $ 251
முருகனுக்கு சத்ரு சம்ஹார திரிசதி பூஜை $ 251
நவக்கிரக ஹோமம் (9 வகை பிரசாதம் வழங்கப்படும்) $ 351
ருத்ரா அபிஷேகம் $ 351
சங்காபிஷேகம் $ 351
ஆயுஷ்ய ஹோமம் $ 301
மிருத்யுஞ்சய ஹோமம் $ 301
சுதர்சன ஹோமம் $ 401
108 கலசாபிஷேகம் $ 451
ஷண்முகார்ச்சன $ 501
முடிக்கயிறு $ 3
மார்கழி திருப்பள்ளி எழுச்சி பூஜை $ 61
புதிய வாகனப் பூஜை $ 35
உச்சிகாலம் / அர்தஜாம சிறப்புப் பூஜை $ 51
பிறந்த குழந்தைக்கு 30வது நாள் பிரார்த்தனை $ 51
குழந்தைத் தத்தம் $ 51
நாமகரணம் (குழந்தைக்குப் பெயர் வைத்தல்) $ 51
அன்னப்பிராசனம் (குழந்தைக்கு முதல் சோறு ஊட்டுதல்) $ 51
வித்யாரம்பம் (தனிப்பட்ட முறையில் செய்வதற்கு) $ 51
 சத்ய நாராயண பூஜை $ 321
சகஸ்ரநாம அர்ச்சனை $ 40
படையல் பூஜை $251

நிர்வாகக் குழு

தலைவர்:

திரு லெட்சுமணன் S/O சீனிவாசகன்

துணைத் தலைவர்:

திரு போபா ஸ்ரீநிவாஸ்

செயலாளர்:

திரு கதிரேசன் S/O P சண்முகம்

பொருளாளர்

திரு T G கிரிதரன்

உறுப்பினர்கள்

திரு கண்ணப்பன் முத்துகணபதி
திரு அண்ணாமலை சரவணன்
திரு முருகைய்யன் ரவிகுமார்
குமாரி ஜெயந்தி D/O பொன்னசாமி மணியன்
திரு V தினேஷ் நடராஜன்
திரு V R S ரமேஷ்
குமாரி V சாந்தினி

 

கோயில்கள்

ஸ்ரீ சிவன் கோயில்

ஸ்ரீ சிவன் கோயில்

ஸ்ரீ சிவன் கோயில், 1850-களின் தொடக்கத்தில் ஒரு கட்டடமாக மறுநிர்மாணம் செய்யப்பட்டதாகக் குறிப்புகள் பதிவாகியுள்ளன. ஆர்ச்சர்ட் ரோட்டில், தற்போது டோபி காட் பெருவிரைவு போக்குவரத்து இரயில் நிலையம் அமைந்துள்ள பகுதியில், கோயில் அமையப் பெற்றிருந்தது. 1850-ஆம் ஆண்டிற்கு...

read more
ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில்

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில்

சிங்கப்பூரின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்று, ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில். தொடக்கத்தில் கிளினி ரோட்டில் கட்டப்பட்ட இக்கோயில், தோ பாயோவிற்கு இடம் மாறும் முன்னர், மேலும் இரண்டு முறை இடம் மாற்றப்பட்டது. கோயிலின் முதல் கட்டடம், கிளினி ரோட்டில், டேங்க் ரோட்டிற்கும்...

read more

எங்களை தொடர்பு கொள்ள:

~|icon_pin~|elegant-themes~|solid

244 சவுத் பிரிட்ஜ் சாலை, சிங்கப்பூர் 058793

~|icon_phone~|elegant-themes~|solid

62234064

~|icon_printer-alt~|elegant-themes~|solid

62234064