ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில்

சிங்கப்பூரின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்று, ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில். தொடக்கத்தில் கிளினி ரோட்டில் கட்டப்பட்ட இக்கோயில், தோ பாயோவிற்கு இடம் மாறும் முன்னர், மேலும் இரண்டு முறை இடம் மாற்றப்பட்டது.

கோயிலின் முதல் கட்டடம், கிளினி ரோட்டில், டேங்க் ரோட்டிற்கும் உட்லண்டஸில் உள்ள ஜொகூர் பாலத்திற்கும் இடையில் கட்டத் திட்டமிடப்பட்டிருந்த இரயில் தடம் இடம்பெறும் வழியில் அமைந்திருந்தது. அதன் காரணமாக, உள்ளூர் நகராண்மை இரயில் துறை அதிகாரிகள், கோயிலின் அறங்காவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, புதிய இரயில் தடங்கள் கட்டப்படுவதன் பேரில், கோயில் நிலத்தை வாங்கிக்கொண்டனர். பின்னர், கோயில் அறங்காவலர்கள், ஆர்ச்சர்ட் ரோட்டில் இருந்த காலி நிலப்பகுதியில் புதிய கோயிலை எழுப்பினர்.   துரதிர்ஷ்டவசமாக, இரயில் துறை அதிகரிகள் மீண்டும் கோயில் நிலத்தைக் கையகப்படுத்திக்கொண்டனர்.   அதன் காரணமாக, இரண்டாவது முறையாக கோயில் இடம் மாறவேண்டியிருந்தது. 1921-ஆம் ஆண்டில், கோயில் கட்டும் பணிகளுக்காக 21 சாம்ர்செட் ரோட்டில் (டெலிகாம் கட்டடத்திற்கு எதிர்ப்புறம்) புதிய இடம் வாங்கப்பட்டது. இவ்விடத்தில் இருந்த கோயில் கட்டடம், 1933-ஆம் ஆண்டில், மொஹமதிய இந்து அறக்கட்டளை வாரியத்தால் 1933-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, 6 டிசம்பர் 1933 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மேலும் அறிய

செப்டம்பர் 1970-இல், சாமர்செட் ரோடு இடத்தில் அமைந்திருந்த கோயிலுக்குச் சொந்தமான 8,854 சதுர அடிப் பரப்பளவிலான நிலம் அனைத்தும், மேம்பாட்டுப் பணிகளின் காரணமாக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது. 5 செப்டம்பர் 1982 அன்று, கோயில், தோ பாயோவில் உள்ள அதன் தற்போதைய இடத்திற்கு மாறியது. கோயில் கட்டப்படுவதற்கு முன்னர், அங்குள்ள திருமண மண்டபம் கட்டப்பட்டதால், தெய்வங்கள் அங்கு தற்காலிகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டன. கோயில் வளாகம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர், 27 மார்ச் 1986 அன்று, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிங்கப்பூரின் முதல் தமிழ் – ஆங்கில பாலர் பள்ளியான சரஸ்வதி பாலர் பள்ளியை நிறுவிய பெருமை, ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலையே சேரும். இந்தச் சேவை மிகுந்த பிரபலம் அடைந்ததால், 1990-ஆம் ஆண்டில், கிம் கியாட் வட்டாரத்தில், முழுமையான பாலர் பள்ளி ஒன்று நிறுவப்பட்டது.

 

இக்கோயிலில் கொண்டாடப்படும் பிரதான விழாக்களில் சில, பிரம்மோற்சவம், சந்தனக்குட அபிஷேகம், பெரியாச்சி பூஜை, மகர விளக்கு ஆகியவை ஆகும்.

கோயில் திறக்கும் நேரம்

}~|icon_clock_alt~|elegant-themes~|outline

திங்கள் முதல் ஞாயிறு வரை
காலை 5:15 மணி முதல் காலை 11:30 மணி வரை
மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை

அர்ச்சனை சேவைகள் தினமும் காலை 11:15 மணிக்கும், இரவு 8:15 மணிக்கும் முடிவடையும்.

தினசரி நிகழ்வுகள்

தெய்வங்கள்

சேவைகள்

சேவைகள் விலை
சிறப்பு அபிஷேகம் / பூஜை
கூடுதல் சுவாமிகள் (ஒன்றுக்கு)
$ 131
$ 71
சந்தனக் காப்பு முழுமையாக (ஒவ்வொரு சுவாமிக்கும்)
சந்தனக் காப்பு சுவாமி முகம் மட்டும் (ஒவ்வொரு சுவாமிக்கும்)
$ 131
$ 61
ஹோமம் (ஒவ்வொரு சுவாமிக்கும்) (இரு வகை பிரசாதம் வழங்கப்படும்) $ 251
முருகனுக்கு சத்ரு சம்ஹாரா திரிசதி பூஜை $ 251
நவக்கிரக ஹோமம் (9 வகை பிரசாதம் வழங்கப்படும்) $ 351
ருத்ரா அபிஷேகம் $ 351
சங்காபிஷேகம் $ 351
ஆயுஷ்ய ஹோமம் $ 301
மிருத்யுஞ்சய ஹோமம் $ 301
சுதர்சன ஹோமம் $ 301
108 கலசாபிஷேகம் $ 451
ஷண்முகார்ச்சனை $ 501
முடிக்கயிறு $ 3
மார்கழி திருப்பள்ளி எழுச்சி பூஜை $ 61
புதிய வாகனப் பூஜை $ 35
உச்சிகாலம் / அர்த்தஜாம சிறப்புப் பூஜை $ 51
பிறந்த குழந்தைக்கு 30வது நாள் பிரார்த்தனை $ 51
குழந்தைத் தத்தம் $ 51
நாமகரணம் (குழந்தைக்குப் பெயர் வைத்தல்) $ 51
அன்னப்பிராசனம் (குழந்தைக்கு முதல் சோறு ஊட்டுதல்) $ 51
வித்யாரம்பம் (தனிப்பட்ட முறையில் செய்வதற்கு) $ 51
சகஸ்ரநாம அர்ச்சனை $ 40
துலாபாரம் (காணிக்கை) $ 31
படையல் பூஜை $ 251

நிர்வாகக் குழு

தலைவர் திரு N புருஷோத்தமன்
துணைத் தலைவர்
செயலாளர் திரு விஜய்வர்மன் S/O ஞானசேகரன்
பொருளாளர் திரு R சொக்கலிங்கம்
உறுப்பினர்கள்: திரு சுப்பையா குணசேகரன்
திரு AL இளங்கோ
திரு M சுப்ரமணியம்
திரு M குணசேகரன்
திரு வினோத் குமார் M
திரு A சதிஷ் குமார்
திரு R கேசவராஜ்

எங்களைத் தொடர்புகொள்ள

~|icon_pin~|elegant-themes~|solid

2001 தோ பாயோ லோரொங் 8, சிங்கப்பூர் 319259

~|icon_phone~|elegant-themes~|solid

62595238

~|icon_printer-alt~|elegant-themes~|solid

62587677