இரவு 9:00 மணி முதல் 10: 00 மணி வரை எந்த நேரத்திலும் 50 பக்தர்கள் மட்டுமே கோயிலில் அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் பால் குட அபிஷேகத்திற்கு http://smt.org.sg/ இணையத்தளத்தில் கட்டணம் மற்றும் பதிவு செய்யலாம்.
உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் பால் குடத்தைத்ச் செலுத்திவிடுவார்கள்.
பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பௌர்ணமி பூஜையை பார்க்க இயலாது.
அமைக்கப்பட்டுள்ள பாதை வழியே பக்தர்கள் நிற்காமல் நடந்து தரிசனம் செய்வதால், மற்ற பக்தர்கள் கோயிலுக்குள் உள்ளே வர வாய்ப்பு கிட்டும்.
முதியவர்கள், நாள்பட்ட அல்லது உள்ளார்ந்த நிலைமைகள் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் தங்கள் நலனுக்காக வீட்டிலிருந்து நேரடி ஒளிபரப்பை https://youtu.be/cd0KFJvFt3A என்ற இணையத்தளத்தில் இரவு 9:00 மணி முதல் கண்டு வழிபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உங்கள் ஒத்துழைப்பையும் புரிதலையும் நாங்கள் நாடுகிறோம். மேல் விவரங்களுக்கு கோயில் அலுவலகத்தை 62234064 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.