Loading Events

« All Events

  • This event has passed.

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சிறப்பு பால் குட அபிஷேகம்

ஜனவரி 1, 2022

சிறப்பு பால் குட அபிஷேகம்

  • காலை 5:00 மணி முதல் காலை 11:30 மணி வரை மற்றும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை, எந்நேரமும் 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
  • முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதி. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கோயிலுக்குள் நுழைய விரும்பினால், நிகழ்ச்சிக்கு முந்தைய கொவிட்-19 பரிசோதனையில் (Pre-Event Testing) தொற்று இல்லையென்று உறுதிசெய்யப்பட்ட சான்றிதழை காண்பித்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
  • பால் குட அபிஷேகத்திற்கு http://smt.org.sg/ எனும் இணையத் தளத்தில் பதிவு செய்து கட்டணம் செலுத்தலாம்.
  • உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் பால் குடத்தை செலுத்திவிடுவார்கள்.
  • சிறப்பு பால் குட அபிஷேகத்தின் நேரலையை https://youtu.be/8Qrp43A2GRc  எனும் இணையப் பக்கத்தில் காணலாம்.
  • இந்த மாற்றங்களின் தொடர்பில் உங்களது ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் நாடுகிறோம். கூடுதல் விவரங்களுக்கு, 62234064 எனும் கோயில் அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

Details

Date:
ஜனவரி 1, 2022
Event Categories:
, ,
Website:
http://smt.org.sg/Services/MassEvent