Loading Events

« All Events

  • This event has passed.

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பெளர்ணமி பூஜை

பிப்ரவரி 16

பெளர்ணமி பூஜை

  • இரவு 8.30 மணி முதல் இரவு 10 மணி வரை, எந்நேரமும் 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
  • முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
  • பால் குட அபிஷேகத்திற்கு http://smt.org.sg/ எனும் இணையத் தளத்தில் பதிவு செய்து கட்டணம் செலுத்தலாம்.
  • உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் பால் குடத்தை செலுத்திவிடுவார்கள்.
  • பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பௌர்ணமி பூஜையை பார்க்க இயலாது.
  • மற்றவர்களும் கோயிலுக்குள் நுழைந்திட வாய்ப்பு தர, பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதையில் நிற்காமல், தொடர்ந்து நடந்தவாறு வழிபாட்டில் ஈடுபடுமாறு கோயில் நிர்வாகம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.
  • முதியோர், இளம் பிள்ளைகள், உடற்குறையுள்ளோர் ஆகியோர் வீட்டிலிருந்தவாறு வழிபாட்டில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகின்றனர். பெளர்ணமி பூஜையின் நேரலையை https://heb.org.sg/ எனும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையப் பக்கத்தில் காணலாம்.
  • இந்த மாற்றங்களின் தொடர்பில் உங்களது ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் நாடுகிறோம். கூடுதல் விவரங்களுக்கு, 62234064 எனும் கோயில் அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

Details

Date:
பிப்ரவரி 16
Event Categories:
, ,
Website:
http://smt.org.sg/Services/MassEvent