
- This event has passed.
ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ராஜகோபுரம் மற்றும் விமான பாலஸ்தாபனம்
ஜனவரி 21, 2022 - ஜனவரி 23, 2022
ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ராஜகோபுரம் மற்றும் விமான பாலஸ்தாபனம்
- முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
- எந்நேரமும், 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
- சிறப்பு வழிபாட்டை கோயிலின் பகுதியில் நின்றவாறு பார்வையிட இயலாது. பக்தர்கள் அமைக்கப்பட்ட பாதை வழியே நடந்தவாறு தரிசனம் செய்யும்மாறு தாழ்மையுடன் கோயில் நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு செய்வதால் மற்ற பக்தர்களாலும் கோயிலுக்குள் வந்து தரிசனம் செய்ய முடியும்.
- 21 ஜனவரி 2022, வெள்ளிக்கிழமை இரவு முதல் 23 ஜனவரி 2022, ஞாயிற்றுக்கிழமை காலை வரை, அர்ச்சனைகள் மற்றும் முன்பதிவு செய்த பூஜைகள் நடைபெறாது.
- பின்வரும் நிகழ்வுகளின் நேரலையை https://heb.org.sg/ எனும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையத் தளத்தில் பார்வையிடலாம்:
- 21 ஜனவரி 2022 | மாலை 6 மணி
- 22 ஜனவரி 2022 | காலை 9 மணி மற்றும் மாலை 7 மணி
- 23 ஜனவரி 2022 | காலை 7 மணி
- கூடுதல் விவரங்களுக்கு, 62234064 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளவும்.