
- This event has passed.
தை அமாவாசை
ஜனவரி 31, 2022
வரும் ஜனவரி 31 ஆம் தேதி , திங்கட்கிழமை அன்று, தை அமாவாசை வழிபாடு ஸ்ரீ சிவன் கோயிலில் இடம்பெறும்
முக்கிய தகவல்கள்:
- தர்ப்பணம் கொடுக்க விரும்பும் பக்தர்கள் கோயிலின் இணையப் பக்கத்தில் முன்பதிவு செய்வது அவசியமாகும். இணையம் வழி முன்பதிவு செய்யாமல் அந்நாளில் நேரடியாக கோயிலுக்கு வந்து தர்ப்பணம் சீட்டை வாங்க முடியாது.
- கொவிட்-19 கட்டுப்பாடுகளால், குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள பக்தர்கள் மட்டுமே தர்ப்பணம் போன்ற சிறப்பு வழிபாட்டு சேவைகளில் பங்கெடுக்க முடியும்.
- உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழிபாட்டு நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன் கோயிலை சென்றடைந்தால் போதுமானது.
- கோயிலில் பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதை வழியே நிற்காமல் தொடர்ந்து நடந்தவாறு வழிபாடு முடிந்ததும், கோயில் வளாகத்திலிருந்து புறப்படும்படி பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
- கோயில் பிரசாதத்தை கோயில் வளாகத்தில் உண்ண வேண்டாம்.
- வழிபாட்டின்போது எந்நேரமும் முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.
- கோயிலுக்குள் நுழைய ஏற்கெனவே முன்பதிவு செய்த விவரத்தை கோயில் ஊழியரிடம் காண்பிக்கவும்.
- நடப்பிலுள்ள பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும்.
- முமுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். இருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களே முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என கருதப்படுவர். இரண்டாம் முறை தடுப்பூசி போட்டுக்கொள்ளோர் தடுப்பூசி போட்டப் பிறகு, இரு வாரம் காத்திருக்க வேண்டும். இரு வாரம் கடந்த பிறகே, அவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என கருதப்படுவர்.
- தர்ப்பணம் பிரார்த்தனைக்கான அனைத்து இடங்களும் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. நீங்கள் ஆத்மசாந்தி அர்ச்சனையில் பங்கு பெறலாம்.
மேல் விவரங்களுக்கு, 67434566 எனும் கோயில் அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.