தீமிதித் திருவிழா 2022

ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் தீமிதித் திருவிழா சிங்கப்பூரில் வாழும் இந்து மக்களுக்கு ஒரு முக்கிய நிகழ்வாகும். சுமார் மூன்று மாதங்கள் நீடிக்கும் இத்திருவிழாவை முன்னிட்டு, பல சிறப்பு பூஜைகளும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இவற்றை தொடர்ந்து, வரும் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி அன்று,தீமிதித் திருநாளில் தீக்குழியை பக்தர்கள் கடப்பர். இது சிங்கப்பூரின் ஆக பழமையான இந்து கோயிலான, சவுத் பிரிட்ஜ் சாலை ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெறும்.

இவ்விழாவுக்கு நீண்ட வரலாறு உண்டு. கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக, இது சிங்கப்பூரில் வாழும் இந்து மக்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது, இங்கு வரவழைக்கப்பட்ட தமிழ்நாட்டின் கிராம ஊழியர்களால் இவ்விழா இங்கு அறிமுகம் கண்டது. இவ்விழா மாபெரும் காப்பியமான மகாபாரதத்தை மையப்படுத்தியது. இது அந்த காப்பியத்தில் இடம்பெறும் மூல கதாபாத்திரமான திரெளபதி அம்மனை போற்றும் வகையில் அமைகிறது. இவர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் இடம்பெறும் முக்கிய கடவுள். காப்பியத்தில் இடம்பெற்ற மாபெரும் யுத்தத்தின் முடிவில், திரெளபதி அம்மன் நிறைவேற்றிய சபதத்தை இவ்விழா குறிக்கின்றது.

தீமித் திருவிழாவின் தொடக்கமான கொடியேற்றம், வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடக்கும். தீக்குழியை கடக்கும் தீமித் திருவிழா வரும் அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறுவதோடு விழா தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் அக்டோபர் 20ஆம் தேதியுடன் நிறைவுபெறும்.

 

 

கோயில் திறக்கும் நேரம்

 
}~|icon_clock_alt~|elegant-themes~|outline

திங்கள் முதல் ஞாயிறு வரை
காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை
மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை 

அர்ச்சனை சேவைகள் தினமும் காலை 11.30 மணிக்கும் இரவு 8.30 மணிக்கும் நிறைவுபெறும்.

தீமிதித் திருநாளுக்கும் அதற்கு முந்தைய விழா நிகழ்வுகளிலும் நேர்த்திக்கடனை செலுத்த விரும்பும் பக்தர்கள், வரும் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவுக்கான இச்சேவை வரும் அக்டோபர் 15ஆம் தேதி, இரவு 9.00 மணி வரையில் நீடிக்கும்

தீமிதித் திருவிழா 2022 பற்றிய தகவல்கள்

 • ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் தீமிதித் திருவிழா இவ்வாண்டு வரும் அக்டோபர் 16ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று, செளத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெறும்.
 • தீமிதித் திருவிழா நாளன்றும் அதற்கு முந்தைய வார இறுதி நாட்களிலும் நேர்த்திக்கடனை செலுத்த விரும்புவோர், அதற்கென கட்டாயமாக பதிவு செய்துகொள்ள வேண்டும்.
 • திருவிழாவுக்கான நாட்கள் நெருங்க, திட்டங்கள் மாறலாம், கூடுதல் கட்டுப்பாடுகள் அந்நேரத்தில் அறிமுகமாகலாம். அப்போது, முன்பதிவுகள் பாதிக்கப்பட்டு கட்டணங்கள் திரும்பக் கொடுக்கப்படலாம். இவற்றை கருத்தில் கொண்டு பக்தர்களின் புரிந்துணர்வை நாடுகிறோம்.
 

இணையம் வழி பதிவுசெய்யும் விவரம்

 • பால்குடம் செலுத்துதல், அங்கப்பிரதட்சணம், குடும்பிடுதண்டம் போன்ற முன்னோட்ட நிகழ்வுகளுக்கும் தீமிதித் திருநாளில் பூக்குழியை கடப்பதற்கும், அதனைச் சுற்றி வலம் வருவதற்கும் இணையத்தில் கட்டாயமாக முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
 • திருவிழா பங்கேற்பாளர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
 • தீமிதித் திருநாளுக்கும் அதற்கு முந்தைய விழா நிகழ்வுகளிலும் நேற்றிக்கடனை செலுத்த விரும்பும் பக்தர்கள், வரும் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவுக்கான இச்சேவை வரும் அக்டோபர் 15ஆம் தேதி, இரவு 9:00 மணி வரையில் நீடிக்கும். பதிவு செய்ய இங்கு ‘கிலிக்’ செய்யவும்.
 •  
 • பால்குடம் செலுத்துதல், அங்கப்பிரதட்சணம், குடும்பிடுதண்டம் போன்ற முன்னோட்ட நிகழ்வுகள் எல்லாம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் நடைபெறும்.
 • முன்பதிவு செய்துகொண்ட பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே கோயிலுக்கு வந்தால் போதுமானது. அதற்கும் முன்பதாக வரும் பக்தர்கள் முன்கூட்டியே நேற்றிக்கடனை செலுத்த இயலாது, அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட  நேரத்திற்காக காத்திருக்க வேண்டும்.
 • கட்டணம் செலுத்தி, வெற்றிகரமாக இணையத்தில் விழா நிகழ்வுகளுக்கு பதிவு செய்யும் பக்தர்களுக்கு குறுஞ்செய்தியும் (SMS) மின் அஞ்சலும் அனுப்பப்படும். பதிவு செய்யும் இணையத் தளத்தில் பல்வேறு மின்-கட்டண தெரிவுகள் உள்ளன.

திருவிழா பங்கேற்புக்கான விதிமுறைகள்

 • பங்கேற்பாளர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
 • கோயிலினுள் நுழைந்து நேற்றிக்கடனை செலுத்த பதிவு செய்த நபருக்கு மட்டுமே அனுமதி உண்டு. இணையத்தில் வெற்றிகரமாக கட்டணம் செலுத்திய பிறகே, முன்பதிவு உறுதியானதாக ஏற்றுக்கொள்ளப்படும்.
 • பால்குடம் செலுத்துதல், அங்கப்பிரதட்சணம், குடும்பிடுதண்டம் போன்ற நிகழ்வுகளில் பங்குபெறும் பக்தர்கள், அதற்க்காக ஒதுக்கப்பட்ட பாதை வழியே ஒருமுறை மட்டுமே வலம்  வந்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்த இயலும்.
 • பதிவுகொண்ட பக்தர்களுக்கு கோயில் தயாரித்த பால்குடங்களும் மாவிளக்குகளும் வழங்கப்படும். பக்தர்களே சொந்தமாக தயாரித்த பால்குடங்களும் மாவிளக்குகளும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு அனுமதிக்கப்படாது.
 • முன்பதிவு செய்துகொண்ட பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே கோயிலுக்கு வந்தால் போதுமானது. அதற்கும் முன்பதாக வரும் பக்தர்கள் முன்கூட்டியே நேர்த்திக்கடனை செலுத்த இயலாது, அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்காக காத்திருக்க வேண்டும். தாமதமாக வரும் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாமல் போகலாம்.

தீமிதித் திருநாளுக்கான விதிமுறைகள் (அக்டோபர் 16ஆம் தேதி)

 • அக்டோபர் 16ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று பூக்குழியை கடக்கும் ஆண் பக்தர்கள் அனுமதி வளையல் (ரிஸ்பேண்ட்) , கங்கணத்தை கீழ்வரும் இடங்களிலும், அனுமதிக்கப்பட நேரங்களிலும் மட்டுமே பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்:
  • • ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் (பிஜிபி மண்டபம்) – அனுமதிக்கப்பட்ட நேரம்: மாலை 5 மணி, மாலை 6 மணி, மாலை 7 மணி
  • • ஸ்ரீ மாரியம்மன் கோயில் (பகோடா சாலை) – அனுமதிக்கப்பட்ட நேரம்: இரவு 9:30 மணி, இரவு 10:30 மணி மற்றும் இரவு 11.30 மணி
  • ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் அனுமதி வளையல் (ரிஸ்பேண்ட்) , கங்கணத்தை பெற்றுக்கொள்ள முன்பதிவுசெய்து கொண்ட பக்தர்கள் அவற்றை ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பெற்றுக்கொள்ள இயலாது. அதே போன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் அனுமதி வளையல் (ரிஸ்பேண்ட்) , கங்கணத்தை பெற்றுக்கொள்ள முன்பதிவுசெய்து கொண்ட பக்தர்கள் அவற்றை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் பெற்றுக்கொள்ள முடியாது.
 • 16 வயதுக்கும் கீழ்பட்டவர்களும் பெண் பக்தர்களும் பூக்குழியை கடந்து வருவதற்கு அனுமதி கிடையாது.
 • 16 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட பக்தர்கள் பூக்குழியை கடப்பதாக இருந்தால் வரும் அக்டோபர் 10ஆம் தேதிக்குள்,இரவு 7 மணி முதல் இரவு 9 மணியிலான நேரத்தில் தங்களது பெற்றோர் அல்லது காப்பாளருடன் (கார்டியன்) ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு வ ந்து, விவரங்களை உறுதி செய்துகொண்டு திருவிழாவுக்கு பதிவு செய்துகொள்ளலாம்.
 • பூக்குழியைக் கடக்கும் பக்தர்கள் பூ மாலை அல்லது பூஜை பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.
 • பெண் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் பூக்குழியை வலம் வருவதற்கு ஒருமுறையே அனுமதிக்கப்படுவர்.

 

விழா நேரலை

 • தீமிதித் திருவிழா தொடர்பான முக்கிய நிகழ்வுகள்/பூஜைகள் ஆகியவற்றின் நேரலை இந்து அறக்கட்டளை வாரிய ‘யூடியூப்’ இணையத் தளத்திலும் ‘ஃபேஸ்புக்’ பக்கத்திலும் இடம்பெறும்.  தீமிதித் திருவிழாவின் இறுதி நிகழ்வு வரையிலான நேரலையை இத்தளங்களில் காணலாம்.
 •  https://www.youtube.com/hinduendowmentsboard அல்லது https://www.facebook.com/hinduendowmentsboard ஆகிய இணையத் தளங்களில், தீமிதித் திருவிழா தொடர்பான நிகழ்வுகளின் நேரலையை பார்வையிடலாம்.