தீமிதித் திருவிழா 2024
ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் தீமிதித் திருவிழா சிங்கப்பூரில் வாழும் இந்து மக்களுக்கு ஒரு முக்கிய நிகழ்வாகும். சுமார் மூன்று மாதங்கள் நீடிக்கும் இத்திருவிழாவை முன்னிட்டு, பல சிறப்பு பூஜைகளும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இவற்றை தொடர்ந்து, வரும் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று,தீமிதித் திருநாளில் தீக்குழியை பக்தர்கள் கடப்பர். இது சிங்கப்பூரின் ஆக பழமையான இந்து கோயிலான, சவுத் பிரிட்ஜ் சாலை ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெறும்.
இவ்விழாவுக்கு நீண்ட வரலாறு உண்டு. கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக, இது சிங்கப்பூரில் வாழும் இந்து மக்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது, இங்கு வரவழைக்கப்பட்ட தமிழ்நாட்டின் கிராம ஊழியர்களால் இவ்விழா இங்கு அறிமுகம் கண்டது. இவ்விழா மாபெரும் காப்பியமான மகாபாரதத்தை மையப்படுத்தியது. திருவிழாவின்போது, மகாபாரதத்தில் இடம்பெறும் முக்கிய காட்சிகளை நடித்துக்காட்டுவதில் தொண்டூழியர்கள் ஈடுபடுவர். இது அந்த காப்பியத்தில் இடம்பெறும் மூல கதாபாத்திரமான திரெளபதி அம்மனை போற்றும் வகையில் அமைகிறது. இவர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் இடம்பெறும் முக்கிய கடவுள். காப்பியத்தில் இடம்பெற்ற மாபெரும் யுத்தத்தின் முடிவில், திரெளபதி அம்மன் நிறைவேற்றிய சபதத்தை இவ்விழா குறிக்கின்றது.
தீமித் திருவிழாவின் தொடக்கமான கொடியேற்றம், வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடக்கும். தீக்குழியை கடக்கும் தீமித் திருவிழா வரும் அக்டோபர் 20ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதோடு விழா தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் அக்டோபர் 24ஆம் தேதியுடன்(வியாழன்) நிறைவுபெறும்.
தீமிதித் திருவிழா 2024 பற்றிய தகவல்கள்
-
- ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் தீமிதித் திருவிழா இவ்வாண்டு வரும் அக்டோபர் 20ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று, செளத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெறும்.
- தீமிதித் திருவிழாவின் தொடக்கத்தை குறிக்கும் கொடியேற்றம் வரும் திங்கட்கிழமை, 5ஆம் ஆகஸ்ட் 2024 தேதியன்று நடைபெறும்.
- தீமிதித் திருவிழா நாளன்றும் அதற்கு முந்தைய நிகழ்வுகளிலும் நேர்த்திக்கடனை செலுத்த விரும்புவோர், கட்டாயமாக முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும். எல்லா நாட்களிலும் கோயில் வளாகத்தில் இதற்கான பதிவு சீட்டுகளை நேரடியாக வந்து வாங்க முடியாது.
- முன்பதிவு பணத்தைத் திரும்பப்பெற மற்றும் ரத்துசெய்யும் கொள்கை இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் பதிவை முடிப்பதற்கு முன், தேதி, நேரம், இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வு விவரங்களையும் மதிப்பாய்வு செய்யும்படி உங்களை ஊக்குவிக்கிறோம். முன்பதிவுகளில் மாற்றங்கள் சாத்தியமில்லை.
- எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக, தேதி, நேரம் மற்றும் இருப்பிடம் உட்பட, ஆனால் அவை மட்டும் அல்லாமல் நிகழ்வின் வடிவமைப்பில் மாற்றங்களைச் செய்வதற்கான உரிமையை அமைப்பாளர்கள் வைத்துள்ளனர். அத்தகைய மாற்றங்கள் HEB இன் இணையதளம், Facebook மற்றும் Instagram அல்லது பதிவுசெய்யப்பட்ட பங்கேற்பாளர்களின் தொடர்பு எண்கள் மூலம் தெரிவிக்கப்படும்.
- பக்தர்கள் கோயிலை 6223 4064 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது திருவிழாவிற்கான சமீபத்திய ஏற்பாடுகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு பின்வரும் சமூக ஊடக தளங்களைப் பார்வையிடலாம்:
- Website: https://heb.org.sg/fw2024
- Facebook: facebook.com/hinduendowmentsboard
இணைய பதிவுமுறை விவரங்கள்
- பால்குடம் செலுத்துதல், அங்கப்பிரதட்சணம், குடும்பிடுதண்டம் போன்ற முன்னோட்ட நிகழ்வுகளுக்கும் தீமிதித் திருநாளில் பூக்குழியை கடப்பதற்கும், அதனைச் சுற்றி வலம் வருவதற்கும் இணையத்தில் கட்டாயமாக முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
- தீமிதித் திருநாளுக்கும் அதற்கு முந்தைய விழா நிகழ்வுகளிலும் நேற்றிக்கடனை செலுத்த விரும்பும் பக்தர்கள், வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி, திங்கட்கிழமை முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவுக்கான இச்சேவை வரும் அக்டோபர் 19ஆம் தேதி, இரவு 11:00 மணி வரையில் நீடிக்கும்.
- பால்குடம் செலுத்துதல், அங்கப்பிரதட்சணம், குடும்பிடுதண்டம் போன்ற முன்னோட்ட நிகழ்வுகள் எல்லாம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெறும்.
Date
தேதி
Day
நாள்
Events
நிகழ்ச்சி
Slots
நேரம்
05.10.2024 Saturday
சனி
Paal Kudam
பால்குடம்
1am to 2.30am Kumbiduthandam
கும்பிடுதண்டம்
3.30am to 6.30am 06.10.2024 Sunday
ஞாயிறு
Angaprathachanam
அங்கபிரதட்சணம்
5am to 8am 12.10.2024 Saturday
சனி
Paal Kudam
பால்குடம்
1am to 2.30am Kumbiduthandam
கும்பிடுதண்டம்
3.30am to 6.30am 13.10.2024 Sunday
ஞாயிறு
Angaprathachanam
அங்கபிரதட்சணம்
5am to 8am 15.10.2024 Tuesday
செவ்வாய்
Kumbiduthandam
கும்பிடுதண்டம்
6am to 8.30am 16.10.2024 Wednesday
புதன்
Kumbiduthandam
கும்பிடுதண்டம்
6am to 8.30am 17.10.2024 Thursday
வியாழன்
Angaprathachanam
அங்கபிரதட்சணம்
6am to 8.30am 19.10.2024 Saturday
சனி
Paal kudam
பால்குடம்
2.30am to 6am - முன்பதிவு செய்துகொண்ட பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே கோயிலுக்கு வந்தால் போதுமானது. அதற்கும் முன்பதாக வரும் பக்தர்கள் முன்கூட்டியே நேற்றிக்கடனை செலுத்த இயலாது, அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்காக காத்திருக்க வேண்டும்.
- கட்டணம் செலுத்தி, வெற்றிகரமாக இணையத்தில் விழா நிகழ்வுகளுக்கு பதிவு செய்யும் பக்தர்களுக்கு குறுஞ்செய்தியும் (SMS) மின் அஞ்சலும் அனுப்பப்படும். பதிவு செய்யும் இணையத் தளத்தில் பல்வேறு மின்-கட்டண தெரிவுகள் உள்ளன.
- முன்னரே பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை என்பதால், எல்லா பங்கேற்பாளர்களும் சீக்கிரமாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பதிவு செய்த பிறகு, ஒதுக்கப்பட்ட நேரத்தை மாற்ற இயலாது.
பங்கேற்பதற்கான விதிமுறைகள்
- கோயிலினுள் நுழைந்து நேற்றிக்கடனை செலுத்த பதிவு செய்த நபருக்கு மட்டுமே அனுமதி உண்டு. இணையத்தில் வெற்றிகரமாக கட்டணம் செலுத்திய பிறகே, முன்பதிவு உறுதியானதாக ஏற்றுக்கொள்ளப்படும்.
- விழாவின் முன்னோட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ள, ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்திலும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திலும் முன்பதிவு செய்ததற்கு ஆதாரமான குறுஞ்செய்தி (SMS) அல்லது மின்அஞ்சலை ஆலய அதிகாரியிடம் காண்பிக்க வேண்டும். அதன் பிறகே, கோயிலுக்குள் பங்கேற்பாளர்கள் நுழைய அனுமதிக்கப்படுவர்.
- கோயில் தயாரித்த பால்குடம் அல்லது சுயமாக தயாரித்த பால்குடத்தை நேர்த்திக்கடனாக செலுத்த பக்தர்கள் தெரிவு செய்யலாம்.
- கோயில் வளாகத்திலும் அதனை சுற்றியும் போதிய இட வசதி இல்லாததால், சுயமாக தயாரிக்கும் பால்குடத்தை நேர்த்திக்கடனாக கோயிலில் செலுத்தும் பக்தர்கள், அதனை வீட்டிலேயே தயாரித்து வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
- தீமிதித் திருவிழாவில் கும்பிடுதண்டம், அங்கபிரதட்சணம் ஆகியவற்றில் பங்கேற்கும் பக்தர்கள் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே கோயிலை சுற்றிவரும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு செய்வதால் எல்லா பக்தர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தாமதமின்றி நேர்த்திக்கடனை செலுத்த முடியும்.
தீமிதித் திருவிழா (20 அக்டோபர் 2024) அன்று கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்
- அக்டோபர் 20ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று பூக்குழியை கடக்கும் ஆண் பக்தர்கள் அனுமதி வளையல் (ரிஸ்பேண்ட்) , கங்கணத்தை கீழ்வரும் இடத்தில், அனுமதிக்கப்பட்ட நேரங்களில், மட்டுமே பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்:
- ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் (பிஜிபி மண்டபம்) – அனுமதிக்கப்பட்ட நேரம்: மாலை 4 மணி, மாலை 5 மணி, மாலை 6 மணி, மாலை 7 மணி, இரவு 8 மணி
- ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் அனுமதி வளையல் (ரிஸ்பேண்ட்) மற்றும் கங்கணத்தை பக்தர்கள் பெற்றுக்கொள்ள முடியாது.
- 16 வயதுக்கும் கீழ்பட்டவர்களும் பெண் பக்தர்களும் பூக்குழியை கடந்து வருவதற்கு அனுமதி கிடையாது.
- 16 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட பக்தர்கள் பூக்குழியை கடப்பதாக இருந்தால் வரும் 28 செப்டம்பர் முதல் அக்டோபர் 13ஆம் வரை, இரவு 7 மணி முதல் இரவு 9 மணியிலான நேரத்தில் தங்களது பெற்றோர் அல்லது காப்பாளருடன் (கார்டியன்) ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு வ ந்து, விவரங்களை உறுதி செய்துகொண்டு திருவிழாவுக்கு பதிவு செய்துகொள்ளலாம்.
- பூக்குழியைக் கடக்கும் பக்தர்கள் பூ மாலை அல்லது பூஜை பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.
- பெண் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் பூக்குழியை வலம் வருவதற்கு அனுமதிக்கப்படுவர்.
- அக்டோபர் 21ஆம் தேதி, திங்களன்று, பூக்குழியை சுற்றிவரும் பெண் பக்தர்கள் தங்களது அனுமதி வளையல் (ரிஸ்பேண்ட்) , கங்கணத்தை கீழ்வரும் இடத்தில், அனுமதிக்கப்பட்ட நேரங்களில், மட்டுமே பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்:
- ஸ்ரீ மாரியம்மன் கோயில் (கல்யாண மண்டபம் – முதல் மாடி) – அனுமதிக்கப்பட்ட நேரம்: அதிகாலை 1 மணி (21/10/2024),2 மணி (21/10/2024)
தீமிதித் திருவிழா மற்றும் அதன் முன்னோட்ட நிகழ்வுகளுக்கு பதிவுசெய்ய விரும்புவோர் வரும் 10 செப்டம்பர் 2024, திங்கட்கிழமை முதல் 19 அக்டோபர் 2024 (இரவு 11 மணி), சனிக்கிழமை வரை பதிவு செய்யலாம்.
விழா நேரலை
- தீமிதித் திருவிழா தொடர்பான முக்கிய நிகழ்வுகள்/பூஜைகள் ஆகியவற்றின் நேரலை இந்து அறக்கட்டளை வாரிய ‘யூடியூப்’ இணையத் தளத்திலும் ‘ஃபேஸ்புக்’ பக்கத்திலும் இடம்பெறும். தீமிதித் திருவிழாவின் இறுதி நிகழ்வு வரையிலான நேரலையை இத்தளங்களில் காணலாம்.
- https://www.youtube.com/hinduendowmentsboard அல்லது https://www.facebook.com/hinduendowmentsboard ஆகிய இணையத் தளங்களில், தீமிதித் திருவிழா தொடர்பான நிகழ்வுகளின் நேரலையை பார்வையிடலாம்.