Project பக்தி

கண்ணோட்டம்

Project பக்தி என்றால் என்ன?

‘Project பக்தி’ வகுப்புகள், இந்து அறக்கட்டளை வாரியத்தின் கீழ் இயங்கும் இளம் தொண்டூழியர்களால் வழிநடத்தப்படுகின்றன. ‘Project பக்தி’ 2001-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல், சிங்கப்பூரில் உள்ள இந்து மதம் சார்ந்த பிள்ளைகளின் சமயம் தொடர்பிலான தேவைகளைக் கவனித்துகொண்டு வந்துள்ளது. ஆங்கிலத்தில் போதிக்கப்படும் இந்த வகுப்புகள், 5 முதல் 16 வயது வரையிலான பிள்ளைகளுக்குக் கற்பிக்கப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும், 500-க்கும் அதிகமான பிள்ளைகள் இந்து மதம் சார்ந்த இவ்வகை வகுப்புகளில் கலந்துகொள்கின்றனர். அவை, உள்ளூரில் உள்ள சில இந்துக் கோயில்களில் நடத்தப்படுகின்றன.

மேலும்  அறிய  இங்கே கிளிக் செய்க

Project பக்தி வகுப்புகளின் நோக்கம் என்ன?

Project பக்தி கதைகள், நாடகங்கள், விளையாட்டுகள், செய்முறை நடவடிக்கைகள், கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் மூலம் வளமான இந்தியக் கலாசாரத்தையும் தொன்மையான ஆன்மீக அறிவையும் பகிர்ந்துகொள்ள எண்ணம் கொண்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள், பிள்ளைகளிடையே சரியான சிந்தைக்கும் செயல்பாட்டிற்கும் தேவையான மதிப்புகளை வளர்க்க உதவுவதுடன், அவர்கள் அவற்றை சரியாகப் புரிந்துகொண்டு வாழவும் ஊக்குவிக்கின்றது.

 

Project பக்தி வகுப்புகள், பலதரப்பட்ட அம்சங்களுடன் கூடிய இந்து மதம் சார்ந்த கலாசாரத்தையும் இந்துக்கள் பிற மதங்கள், கலாசாரங்கள் ஆகியவை மீது கொண்டுள்ள ஆக்ககரமான மனப்போக்கையும் போற்றுவதற்குரிய தளத்தை பிள்ளைகளுக்கு அமைத்துக் கொடுக்கின்றன. இத்தகைய புரிதல், பிள்ளைகள் தங்கள் பாரம்பரியத்துடன் தங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ளவும், இந்து மதம் சார்ந்த கலாசாரத்திலும் மதிப்புகளிலும் உள்ள மிகச் சிறந்த அம்சங்கள் அனைத்தையும் உணர்வதற்கும் துணைபுரிகின்றது.

ஏன் Project பக்தி நடத்தப்படவேண்டும்?

சிங்கப்பூரின் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், பிள்ளைகள் நமது வளமான கலாசாரத்தைப் புரிந்துகொள்வதற்கு குறைவான வாய்ப்புகளே உள்ளன. நமது சுற்றுச்சூழலில் உள்ள ஆசையைத் தூண்டக்கூடிய அம்சங்களும், இளம் பிள்ளைகளை தம் வசப்படுத்தும் வகையில் மேலும் அதிநவீனமாகிக்கொண்டு வருகின்றன. அதனால், நமது இளையர்கள் ஆரோக்கியமானதொரு கட்டுக்கோப்பான மனநிலையை மேம்படுத்திக்கொள்வதற்கான கல்வியறிவை புகட்ட, அவசரத் தேவை எழுந்துள்ளது.

 

பண்புநல உருவாக்கம் இளவயது முதலில் இருந்தே தொடங்குகின்றது. ஒவ்வொரு பிள்ளையும் உன்னதமான சித்தாந்தங்கள், ஆரோக்கியமான உணர்வுகள், கட்டுக்கோப்பான வாழ்க்கைமுறை ஆகியவற்றுடன் வளர்வதற்கான சரியான சுற்றுச்சூழலை உறுதிசெய்வது ஒவ்வொரு நாட்டின் – பெற்றோரின் கடமையாகும். வருங்காலத் தலைமுறைகளில் மாற்றங்களை விதைக்கவிருப்பவர்களுக்காக இதனை உருவாக்க, கைகோர்த்து பணிபுரிவோம்.

யார் இந்த வகுப்புகளை நடத்துகிறார்கள்?

இந்து மதத்திலும் சமூக சேவையிலும் மிகுந்த ஆர்வமுள்ள இளம் தொண்டூழியர்களே இவ்வகுப்புகளுக்கான ஆசிரியர்கள். தலைமுறை இடைவெளியைக் குறைக்கும் நோக்கத்தில், பிள்ளைகள் கற்பிப்பவர்களுடன் எளிதில் தொடர்புகொள்ளவேண்டும் என்ற காரணத்தால், இத்திட்டத்தை வழிநடத்த இளம் தொண்டூழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

சனிக்கிழமை வகுப்புகள்

பிற்பகல் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை
5 முதல் 12 வயது வரை

லிட்டில் இந்தியா

ஸ்ரீ லக்ஷ்மிநாராயணன் கோயில்

ஞாயிற்றுக்கிழமை வகுப்புகள்

காலை 10 மணி முதல் 11.30 மணி வரை
5 முதல் 12 வயது வரை

சிராங்கூன் நார்த்

தர்ம முனீஸ்வரன் கோயில்

குவீன்ஸ்டவுன்

ஸ்ரீ முனீஸ்வரன் கோயில்

சாங்கி

ஸ்ரீ ராமர் கோயில்

டெப்போ ரோடு

ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோயில்

லிட்டில் இந்தியா

ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில்

யீஷூன்

புனிதமரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோயில்

பதின்ம வயதினருக்கான வகுப்புகள்

காலை 11 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை
13 முதல் 16 வயது வரை

சைனாடவுன்

ஸ்ரீ மாரியம்மன் கோயில்

பதிவு திறக்கப்பட்டுள்ளது

  • ஸ்ரீ லக்ஷ்மிநாராயணன் கோயில் (லிட்டில் இந்தியா )
  • தர்ம முனீஸ்வரன் கோயில் (சிராங்கூன் நார்த் )
  • புனிதமரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோயில் (யீஷூன்)
  • ஸ்ரீ முனீஸ்வரன் கோயில் (குவீன்ஸ்டவுன்)
  • ஸ்ரீ ராமர் கோயில் (சாங்கி)
    • ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோயில் (டெப்போ ரோடு)
    • ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் (லிட்டில் இந்தியா)
    • ஸ்ரீ மாரியம்மன் கோயில் (சைனாடவுன்)

    தொண்டூழியர்கள்

    இந்த வகுப்புகளில் கற்றுக்கொடுக்க நான் தொண்டூழியம் செய்ய முன்வரலாமா?

    ‘Project பக்தி’ வகுப்புகள், இளம் தொண்டூழியர்கள் கொண்ட ஒரு குழுவால் வழிநடத்தப்பட்டு வருகின்றன. எங்களோடு இணைந்து செயல்பட, நாங்கள் எப்போதுமே தொண்டூழியர்களை நாடி வருகின்றோம். ஆக, நீங்கள் பின்வரும் தகுதிகள் உடையவராக இருப்பின்:

    • சிங்கப்பூரர் / நிரந்தரவாசி
    • 21 முதல் 40 வயது வரை
    • ஆங்கிலத்தில் சரளமாக எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல்
    • இந்து மதம் தொடர்பிலான உங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கான ஆர்வம் இருத்தல்
    • பிள்ளைகளுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி கொள்ளுதல்
    • ஊக்குவிக்க, வழிநடத்த, கற்பிக்க மட்டுமின்றி கற்கவும் ஆர்வம் கொண்டிருத்தல்
    • வாரயிறுதியில் நடத்தப்படும் ஆசிரியர் பயிற்சி வகுப்புகளில் (ஓவ்வொரு வகுப்பும் சுமார் 2 மணி நேரம் நீடிக்கும்) கலந்துகொள்ள முடிதல்

      அப்படியென்றால், நாங்கள் உங்களை நாட விரும்புகின்றோம். படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய, இங்கே தட்டவும்.

      கட்டணம்

      பதிவு திறக்கப்பட்டுள்ளது

      பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பின்வரும் வழிகளில் அனுப்பி வைக்கப்படலாம்:

      அஞ்சல்

      Hindu Endowments Board
      397 Serangoon Road
      Singapore 218123

      தொலைப்பிரதி

      6292 9766

      பதிந்துகொள்ளும் தொண்டூழியர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என்பதை தயவுசெய்து குறித்துக்கொள்ளவும். பயிற்சியும் பாடத்திட்ட வளங்களும் வழங்கப்படும்.