சிவதாஸ் – இந்து அறக்கட்டளை வாரியக் கல்வி உதவிநிதி (பாலர் பள்ளி)
கண்ணோட்டம்
சிங்கப்பூரரான, கொடைவள்ளல் சிவதாஸ் சங்கரன் அவர்கள், உதவி தேவைப்படும் இந்துக் குழந்தைகளுக்கு, அவர்களின் கல்வியில் உதவவேண்டி தமது உயிலின் மூலம் அறக்கட்டளை ஒன்றைத் துவக்கி வைத்தார்.
அந்த அறக்கட்டளை, பிந்தங்கிய இந்துக் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல தொடக்கத்தைக் கொண்டிருக்க உதவும் வகையில், சிவதாஸ் – இந்து அறக்கட்டளை வாரியக் கல்வி உதவிநிதியை நிறுவியது.
தகுதியுடைமை
சிவதாஸ் – இந்து அறக்கட்டளை வாரியக் குழு, பின்வரும் தகுதிகளை உடைய இந்துக் குழந்தைகளுக்கு நிதியுதவி அளிக்கும்:
- 18 மாதம் முதல் 6 வயது வரையில்
- சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்
- பாலர் பள்ளி நிதியுதவித் திட்டத்திற்கு (KiFAS) அல்லது நிலைய அடிப்படையிலான நிதியுதவித் திட்டத்திற்குத் (CFAC) தகுதிபெறாதவர்கள்
- $3,500-க்கும் குறைவான மொத்த மாத வருமானத்தைக் கொண்டிருக்கும் குடும்பங்களிலிருந்து வரும் பிள்ளைகள்
நிபந்தனைகள்
நிதியுதவி பெறும் பிள்ளைகள் பள்ளிக்கு முறையாக செல்லவேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது
- விண்ணப்பப் படிவங்கள் பின்வரும் இடத்தில் கிடைக்கப்பெறும்
- இந்து அறக்கட்டளை வாரிய அலுவலகம், 397 சிராங்கூன் ரோடு, சிங்கப்பூர் 218123
- பதிவிறக்கம் செய்யவும்: சிவதாஸ் – இந்து அறக்கட்டளை வாரியக் கல்வி உதவிநிதி (பாலர் பள்ளி)
- அஞ்சல் வழி விண்ணப்பப் படிவத்தைப் பெறுவதற்கு, தயவுசெய்து, 65939209 என்ற எண்ணில் செல்வி ஹேமாவைத் தொடர்புகொள்ளவும்.
- பிள்ளை அனுமதிக்கப்பட்டுள்ள நிலையத்தின் தலைமையாசிரியர் அனைத்து விண்ணப்பங்களையும் ஆதரிக்கவேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், தேவைப்படும் ஏற்புடைய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பப் படிவங்களும், தேவைப்படும் ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும்:Sivadas-HEB Preschool Bursary
Hindu Endowments Board
HEB Office
397 Serangoon Road
Singapore 218123
மின்னஞ்சல்: [email protected] - மேல் விவரங்களுக்கு, தயவுசெய்து, 65939209 என்ற எண்ணில், இந்து அறக்கட்டளை வாரியத்தைச் சேர்ந்த குமாரி ஹேமாவை தொடர்புகொள்ளவும்.
எங்களைத் தொடர்புகொள்ள
கீழே பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு வாரிய நடவடிக்கைகளுக்கும் நீங்கள் தன்னார்வத் தொண்டு செய்ய விரும்பினால், தொலைபேசியில் நிர்வாக மேலாளரைத் தொடர்பு கொள்ளவும்: 6296 3469 .
மாற்றாக, வாரியத்தால் நிர்வகிக்கப்படும் கோயில்களில் ஏதேனும் ஒரு சமய நிகழ்வுகள் அல்லது பண்டிகைகளுக்கு உங்கள் சேவைகளை வழங்க விரும்பினால், தயவுசெய்து கோயில்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
பின்வரும் பகுதிகளில் எங்களுக்கு உதவக்கூடிய நபர்களையும் நாங்கள் தேடுகிறோம். நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளும்போது, நீங்கள் ஆர்வமுள்ள பங்கேற்பு பகுதியைக் குறிக்கவும்:
தேசிய நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகளுக்கு: