மருத்துவ ஆதரவு சேவை

கண்ணோட்டம்

இந்தச் சேவை தொடங்கப்பட்ட முதல் சில ஆண்டுகளில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அண்மை ஆண்டுகளில், இச்சேவை ஆண்டுதோறும் சுகாதார விழா ஒன்றின் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது. சுகாதார விழாவில், இலவச சுகாதாரப் பரிசோதனை, மருத்துவ ஆலோசனை தவிர்த்து, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொதுவான நோய்களுக்கான காரணங்கள், சிகிச்சைகள், தடுப்பு முறைகள் ஆகியவை பற்றிய மருத்துவக் கருத்தரங்கும் நடைபெறுகின்றது. சுகாதார விழாவில் பங்கேற்பவர்கள், இரத்தக் கொழுப்பு, நீரிழிவு, உயரம், உடல் எடை, உடல் எடைக் குறியீடு, உடலில் உள்ள கொழுப்பு குறித்த பகுப்பாய்வு, இரத்த அழுத்தம் முதலான இலவசப் பரிசோதனைகளைத் தேர்வு செய்யலாம். தமிழ் பேசும் மக்களின் தேவையறிந்து, சுகாதார விழாக்கள் தமிழிலும் நடத்தப்படுகின்றன.

மருத்துவ ஆதரவுச் சேவைகள், தீமிதித் திருவிழா, தைப்பூசத் திருவிழா முதலான பெரிய அளவிலான மதம் சமய விழாக்களுக்கு மருத்துவ உதவியும் வழங்குகின்றது.

இலவச மருத்துவச் சேவைக்குப் பதிந்துகொள்ளுங்கள்

சுகாதார விழாக்களின்போது வழங்கப்பெறும் இலவச மருத்துவச் சேவைகள் மூலம் பயன்பெறவேண்டி, பொதுமக்கள் தங்கள் தொடர்பு விவரங்களை இந்து அறக்கட்டளை வாரியத்திடம் பதிந்துகொள்ளலாம். எதிர்வரும் சுகாதார விழாக்கள் பற்றிய அறிவிப்புகள் உள்ளூர் ஊடகங்கள் வாயிலாகத் தெரியப்படுத்தப்படும். இலவச சுகாதாரப் பரிசோதனைக்கும் கருத்தரங்குகளுக்கும் பதிந்துகொள்ள, எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

எங்களைத் தொடர்புகொள்ள