ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் வரலாறு, 1800-களின் பிற்பாதியில் தொடங்கியது. அப்போது, கிழக்கிந்தியக் கம்பெனியுடன் தொழில்முறையில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த, செல்வாக்கு மிகுந்த சமூகத் தலைவர்கள் சிலர், வைணவ வழிபாட்டிற்காக இந்துக் கோயில் ஒன்றைக் கட்ட விரும்பினர். திரு அருணாசல பிள்ளை, திரு கூத்தபெருமாள் பிள்ளை, திரு இராமசாமி பிள்ளை, திரு அப்பாசாமி பிள்ளை, திரு சொக்கலிங்கம் பிள்ளை, திரு இராமசாமி ஜமீந்தாரர் முதலியோர் அவர்களில் அடங்குவர்.
1851-ஆம் ஆண்டில், இவர்கள் ஒன்றுகூடி 2 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலம் ஒன்றை, 26 ரூபாய், 8 அணாவிற்கு (அப்போது சிங்கப்பூர் குடியேற்றத்தில் இந்திய நாணயம் பயன்பாட்டில் தொடர்ந்து இருந்து வந்தது) கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து வாங்கினார்கள். 1885-ஆம் ஆண்டில் அவர்கள் கட்டிய கோயில், நரசிங்கப் பெருமாள் கோயிலாக அழைக்கப்பெற்றது.
மேலும் வாசிக்க
கோயிலின் ஆரம்பகாலக் கட்டடத்தை கட்டி முடித்த பின்னர், கோயிலின் தேவைகளுக்காக, அருகிலிருந்த இரண்டு நிலப் பகுதிகள் வாங்கப்பட்டன. 1894-ஆம் ஆண்டில், பக்தர்களான திரு மூனா சிதம்பரம் பிள்ளையும் திரு வினசித்தம்பி முருகேசுவும் 25,792 சதுர அடிப் பரப்பளவிலான நிலத்தை வாங்கி, கோயிலுக்கு நன்கொடையாக அளித்தனர். அருகிலிருந்த இரண்டாவது நிலப் பகுதி, 3,422 சதுர அடிப் பரப்பளவு கொண்டது. அதனை மொஹாமெடான் இந்து அறக்கட்டளை வாரியம் (1907-ஆம் ஆண்டு முதல், கோயிலின் நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்றது), கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து, 999-ஆண்டு குத்தகைக்கான ஒப்பந்த அடிப்படையில், ஆண்டுக்கு ஒரு டாலர் குத்தகைக் கட்டணம் என்ற வீதத்தில், 15 ஆகஸ்ட் 1912 அன்று பெற்றது.
ஆரம்ப காலத்தில் இருந்த கோயிலின் அமைப்புமுறை, 1950-களின் தொடக்கம் வரை மாறாதிருந்தது. 1952-ஆம் ஆண்டில், மொஹாமெடான் இந்து அறக்கட்டளை வாரியம், கோயிலை மீண்டும் கட்டி, புதுப்பிக்க முடிவெடுத்தது. மறுமேம்பாட்டுப் பணிகள், 1960-களின் தொடக்கத்தில், பிரபல இந்த்ய சமூகத் தலைவரும் கொடைவள்ளலுமான திரு பி கோவிந்தசாமி பிள்ளை, கட்டுமானப் பணிகளுக்கான செலவுத்தொகையில் பெரும்பகுதியை அளித்து உதவிய பின்னரே மேற்கொள்ளப்பட்டன. கோயில் வளாகத்திற்குள் அமையப் பெற்ற முதல் இரு மாடிக் கல்யாண மண்டபத்தை கட்டிய பெருமையும் திரு பிள்ளை அவர்களையே சேரும். அதனை, சிங்கப்பூரின் முதல் அதிபரான, திரு யூசோஃப் பின் இஷாக் 19 ஜூன் 1965 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
பிள்ளையார் சன்னதி, இராஜகோபுரம், கூரை வேயப்பட்ட நடைபாதை தவிர, தற்போதுள்ள கட்டடம் முழுவதும் 1966-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டன. இத்தருணத்தில், மூத்தோர் பலரும், கோயிலின் மூலவர், ஆக்ரோஷமான ஸ்ரீ நரசிம்மராக அல்லாமல், கருணையே வடிவான ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாளாக மாற்றப்படவேண்டும் என்று ஆலோசனை கூறினர். அதனால், கோயில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் எனப் பெயர் மாற்றம் கண்டது.
ஆரம்ப காலங்களில், நிதித் தட்டுப்பாடுகள், கோயிலுக்கான இராஜகோபுரம் எழுப்பப் பெறுவதற்கு தடையாக அமைந்தாலும், 1979-ஆம் ஆண்டில், இராஜகோபுரம் கட்டப்பட்டது. 1970-களில் இடம்பெற்ற மறுமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வந்த மொத்த கட்டுமான, புதுப்பிப்புப் பணிகளுக்கான செலவு அனைத்தையும், திரு பி கோவிந்தசாமி பிள்ளை அவர்களே தாராள மனத்துடன் ஏற்றுக்கொண்டார்.
1978-ஆம் ஆண்டில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு வாரியத்தால், தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
கோயில், 1987, 1992, 2005 ஆகிய ஆண்டுகளில் பெருமளவு மாற்றங்களை எதிர்கொண்டது. மறுமேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு காலகட்டங்களில், ஆலயத்ஹின் தோற்றத்திற்கும், பக்தர்களின் முக்கியமான தேவைகளை ஈடேற்றும் வகையில் கோயில் வசதிகளுக்கும் மேம்பாடுகள் செய்யப்பட்டன. இன்று கோயிலுக்கு வரும் வருகையாளர்கள், கோயிலின் அடுத்தடுத்த நிர்வாகக் குழுவினர், அதன் பராமரிப்பு நிலையைக் கட்டிக்காக்கவேண்டி மேற்கொண்ட அரும்பணிகளைக் கண்கூடாகக் காணமுடியும். நன்கு அமையப்பெற்ற சன்னதிகள், செறிவூட்டும் வளமான சிற்ப வேலைப்பாடுகள், உற்சவ மூர்த்திகளின் வழிபாட்டிற்கான அலங்கார மண்டபம் முதலான பற்பல புதிய அம்சங்கள், கோயிலை இந்து மதத்தின் உருவகமாக சித்தரிக்கின்றன.
இக்கோயிலில் கொண்டாடப்படும் பிரதான விழாக்களில் சில, பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனி ஆகியவை ஆகும்.
கோயில் திறக்கும் நேரம்
ஞாயிற்றுக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
காலை 5:00 மணி முதல் காலை 11:00 மணி வரை
மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை
சனிக்கிழமை மட்டும்
காலை 5:00 மணி முதல் காலை 11:30 மணி வரை
மாலை 5:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை
தினசரி நிகழ்வுகள்
தெய்வங்கள்
சேவைகள்
சேவைகள் | விலை |
---|---|
இந்திர விமானம் சேவை | $ 851 |
ஹோமம் (ஒவ்வொரு சுவாமிக்கும்) (இரு வகை பிரசாதம் வழங்கப்படும்) | $ 251 |
நவக்கிரக ஹோமம் (9 வகை பிரசாதம் வழங்கப்படும்) | $ 351 |
ருத்ரா அபிஷேகம் | $ 351 |
சங்காபிஷேகம் | $ 351 |
ஆயுஷ்ய ஹோமம் | $ 301 |
மிருத்யுஞ்சய ஹோமம் | $ 301 |
சுதர்சன ஹோமம் | $ 401 |
முடிக்கயிரு | $ 3 |
மார்கழி திருப்பள்ளி எழுச்சி பூஜை | $ 61 |
புதிய வாகனப் பூஜை | $ 35 |
உச்சிகாலம், அர்தஜாம சிறப்புப் பூஜை | $ 51 |
பிறந்த குழந்தைக்கு 30வது நாள் பிரார்த்தனை | $ 51 |
குழ்ந்தைத் தத்தம் | $ 51 |
நாமகரணம் (குழந்தைக்குப் பெயர் வைத்தல்) | $ 51 |
அன்னப்பிராசனம் (குழந்தைக்கு முதல் சோறு ஊட்டுதல்) | $ 51 |
வித்யாரம்பம் (தனிப்பட்ட முறையில் செய்வதற்கு) | $ 51 |
சத்ய நாராயண பூஜை | $ 321 |
சகஸ்ரநாம அர்ச்சனை | $ 40 |
அமாவாசை தர்ப்பணம் | $ 5 |
திருமஞ்சனம் (மூலவர்) | $ 281 |
திருமஞ்சனம் (உத்சவர்) | $ 171 |
திருமஞ்சனம் (இதர சுவாமிக்களுக்கு) | $ 151 |
ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு | $ 451 |
சுப்ரபாதம் | $ 101 |
சுப்ரபாதம் (சனிக்கிழமை) | $ 151 |
ஆஞ்சநேயர் சந்தனக் காப்பு | $ 301 |
ஸ்ரீ விஷ்ணு ஹோமம்/ திருமஞசனம் – மூலவர் (வெள்ளி மட்டும்) | $ 501 |
ஸ்ரீ விஷ்ணு ஹோமம் (உத்சவர்) | $ 351 |
ஸ்ரீ விஷ்ணு ஹோமம் (புரட்டாசி மாதம் மட்டும்) | $181 |
ஸ்ரீ சூக்த ஹோமம் | $ 351 |
கருட சேவை | $ 951 |
ஏகாந்த சேவை (திங்கள் முதல் வெள்ளி வரை) | $101 |
ஏகாந்த சேவை (சனி மட்டும்) | $251 |
ஏகாந்த சேவை ( ஞாயிற்று மட்டும்) | $121 |
திருக்கல்யாண உத்சவம் | $1800 |
நேத்ர சேவை / திருப்பாவாடை (வியாழன் காலை மட்டும்) | $151 |
பூலங்கி சேவை (வியாழன் மாலை மட்டும்) | $301 |
ஸ்ரீ மகாலட்சுமி குபேராயகம் | $ 751 |
தங்க ரதம் புறப்பாடு | $601 |
மேலாண்மை குழு
தலைவர்: |
திரு செல்வம் s/o வரதப்பன் |
---|---|
துணைத் தலைவர்: |
குமாரி வளத்தம்மை d/o முத்துபழனியப்பன் |
செயலாளர்: |
திரு ரவி சந்திரன் s/o மகாலிங்கம் |
பொருளாளர்: |
திரு அழகப்பன் பெரியணன் |
உறுப்பினர்கள்: |
திரு விஷ்ணு s/o கருப்பையா தாண்டவம் |