ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் மூலஸ்தானம் மற்றும் பரிவார பாலஸ்தாபனம்
ஸ்ரீ மாரியம்மன் கோயில் ஒரு தேசிய நினைவு சின்னம். அக்கோயில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் நிர்வகிப்பில் இயங்குகிறது. இந்து சமய முறைப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, கோயிலின் தெய்வீக சக்தியை புதுப்பிப்பது வழக்கம். இதே நேரத்தில் கோயிலின் சீரமைப்பு பணியும் நடக்கும். சீரமைப்பு பணி முடிவடைந்ததும், மகா கும்பாபிஷேகம் கோலாகலமான முறையில் நடைபெறும். வரும் 12 பிப்ரவரி 2023, ஞாயிற்றுக்கிழமை அன்று கோயிலின் கும்பாபிஷேகம் நடந்தேறும் என்று ஸ்ரீ மாரியம்மன் கோயில் அறிவித்துள்ளது.
வரும் 7 நவம்பர் 2022, திங்கட்கிழமை, காலை 6 மணி முதல் காலை 7:30 மணி வரையில், ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் மூலஸ்தானம் மற்றும் பரிவார பாலஸ்தாபனம் பூஜைகள் நடைபெறும். பூர்வாங்க பூஜைகள், நவம்பர் 4ஆம் தேதி,வெள்ளிக்கிழமை முதல் நவம்பர் 6ஆம் தேதி , ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கும். நவம்பர் 4ஆம் தேதி, வெள்ளிக்கிழமை முதல் நவம்பர் 7ஆம் தேதி , திங்கட்கிழமை வரையிலான பூஜைகளை காண பக்தர்கள் கோயிலுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
பூஜைகளின் நேரலையை வரும் நவம்பர் 5ஆம் தேதி, சனிக்கிழமை முதல் நவம்பர் 7ஆம் தேதி, திங்கட்கிழமை வரை காண, https://www.youtube.com/hinduendowmentsboard அல்லது https://www.facebook.com/hinduendowmentsboard ஆகிய இணையத் தளங்களுக்குச் செல்லலாம்.
வரும் நவம்பர் 5ஆம் தேதி, சனிக்கிழமை முதல் நவம்பர் 7ஆம் தேதி,திங்கட்கிழமை காலை 8 மணி வரை, மூலஸ்தானம் மற்றும் பரிவார பாலஸ்தாபனம் பூஜைகள் நடைபெறுவதால், பக்தர்களுக்கான இதர வழிபாட்டுச் சேவைகளும் அர்ச்சனைகளும் இருக்காது.
நிகழ்ச்சி நிரல்
தேதி | நேரம் | நிகழ்ச்சி நிரல் |
04.11.2022 | காலை 8:30 மணி | ஸ்ரீ விநாயகர் வழிபாடு, அனைத்து மூர்த்திகளுக்கும் மூலமந்திர ஹோமம், த்ரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை |
காலை 10:30 மணி | அனைத்து தெய்வங்களுக்கும் பிரசன்னாபிஷேகம் | |
காலை 11:45 மணி | ஸகல தேவதா கலசாபிஷேகம் | |
மதியம் 12:30 மணி | உச்சிகால பூஜை, மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் | |
05.11.2022 | காலை 8:30 மணி முதல் மதியம் 12 மணி வரை | தேவதா அனுக்ஞை, ஸ்ரீ மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி , மிருத்ஸங்க்ரஹணம் பரிவார மூர்த்திகள் கலாகர்ஷணம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் |
மாலை 4:00 மணி | ஆலய பூஜை, ஸ்ரீ விநாயகர் பூஜை, புண்யாஹவாசனம், அங்குரார்ப்பணம், ஆச்சார்ய ரக்ஷாபந்தனம் | |
மாலை 6:30 மணி | கும்பாலங்காரம், ப்ரதான மூர்த்தி கலாகர்ஷணம், யாத்ராதானம், யாகசாலை ப்ரவேசம், முதற்கால பூஜைகள், அக்னிகார்யம், ஹோமம் | |
இரவு 8:15 மணி | திரவ்யாஹீதி | |
இரவு 8:30 மணி | பூர்ணாஹுதி, தீபாராதனை | |
இரவு 9:00 மணி | பிரசாதம் வழங்குதல் | |
06.11.2022 | காலை 8:00 மணி | 2ம் கால பூஜைகள் ஆரம்பம், மண்டபபூஜைகள், ஹோமம் |
காலை 10:00 மணி | திரவ்யாஹீதி | |
காலை 10:30 மணி | பூர்ணாஹுதி, தீபாராதனை | |
காலை 11:00 மணி | பிரசாதம் வழங்குதல் | |
மாலை 6:00 மணி | 3ம் கால பூஜைகள் ஆரம்பம், மண்டபபூஜைகள், ஹோமம் | |
மாலை 7:45 மணி | திரவ்யாஹீதி | |
இரவு 8:15 மணி | பூர்ணாஹுதி, தீபாராதனை | |
இரவு 8:30 மணி | பிரசாதம் வழங்குதல் | |
07.11.2022 |
காலை 5:00 மணி | 4ம் கால யாக பூஜைகள் ஆரம்பம், ஹோமம் |
காலை 6:00 மணி | திரவ்யாஹீதி | |
காலை 6:30 மணி | பூர்ணாஹுதி, தீபாராதனை | |
காலை 6:40 மணி | யாத்ரா தானம், யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு, ஆலயம் வலம் வருதல் | |
காலை 7:05 மணி | அனைத்து மூர்த்திகளுக்கும் கலசாபிஷேகம், தொடர்ந்து அலங்காரம் | |
காலை 7:30 மணி | மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் |