ஆடி அமாவாசை 31 தேதி (16.08.2023) புதன்கிழமை கடைபிடிக்கப்படும்
முக்கிய தகவல்கள்:
- ஆடி அமாவாசை 31 தேதி (16.08.2023) புதன்கிழமை கடைபிடிக்கப்படும்.
ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருகின்றன. இரண்டு அமாவாசைகள் வரும் சமயத்தில், இரண்டாவது அமாவாசையை கடைபிடிப்பதுதான் சாஸ்திரம். பஞ்சாங்கத்திலும் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதலால், பக்தர்கள் அனைவரும், 16.08.23, புதன்கிழமை ஆடி அமாவாசையை அனுசரித்து தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் ஆத்மசாந்தி பூஜைகளை செய்து கொள்ளலாம்.
- தர்ப்பணம் கொடுக்க விரும்பும் பக்தர்கள் கோயிலின் இணையப் பக்கத்தில் முன்பதிவு செய்வது அவசியமாகும். இணையம் வழி முன்பதிவு செய்யாமல் அந்நாளில் நேரடியாக கோயிலுக்கு வந்து தர்ப்பணம் சீட்டை வாங்க முடியாது.
- ப, 18 டிசம்பர் 2022 முதல் https://bit.ly/aadiamavasai2023 எனும் கோயில் இணையப் பக்கத்தில் முன்பதிவு செய்யலாம்.
- உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழிபாட்டு நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன் கோயிலை சென்றடைந்தால் போதுமானது.
- கோயிலில் பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதை வழியே நிற்காமல் தொடர்ந்து நடந்தவாறு வழிபாடு முடிந்ததும், கோயில் வளாகத்திலிருந்து புறப்படும்படி பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
- மேல் விவரங்களுக்கு, 67434566 எனும் கோயில் அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.