ஸ்ரீ சிவன் கோயிலில், மஹாளய அமாவாசை
முக்கிய தகவல்கள்:
- தர்ப்பணம் கொடுக்க விரும்பும் பக்தர்கள் கோயிலின் இணையப் பக்கத்தில் முன்பதிவு செய்வது அவசியமாகும். இணையம் வழி முன்பதிவு செய்யாமல் அந்நாளில் நேரடியாக கோயிலுக்கு வந்து தர்ப்பணம் சீட்டை வாங்க முடியாது.
- திங்கட்கிழமை, 12 செப்டம்பர் 2022 முதல் https://bit.ly/mahalayaamavasai2022 எனும் கோயில் இணையப் பக்கத்தில் முன்பதிவு செய்யலாம்.
- உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழிபாட்டு நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன் கோயிலை சென்றடைந்தால் போதுமானது.
- கோயிலில் பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதை வழியே நிற்காமல் தொடர்ந்து நடந்தவாறு வழிபாடு முடிந்ததும், கோயில் வளாகத்திலிருந்து புறப்படும்படி பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
- கோயில் பிரசாதத்தை கோயில் வளாகத்தில் உண்ண வேண்டாம்.
- நடப்பிலுள்ள பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும்.
- மேல் விவரங்களுக்கு, 67434566 எனும் கோயில் அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.