ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி

ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நமது கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


ஸ்ரீ மாரியம்மன் கோயில்

  1. மோதக அர்ச்சனை செலுத்த விரும்புவோர், காலை 10:30 மணி முதல் மதியம் 12 மணி வரை கோயில் அலுவலகத்திலிருந்து சீட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.
  2. 31.08.22, காலை 9:30 மணி முதல், பால் குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  3. கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால் குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்த முடியும்.
  4. மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்

  1. மோதக அர்ச்சனைக்காக பக்தர்கள் கோயில் அலுவலகத்தில் 30 ஆகஸ்ட் 2022, செவ்வாய்கிழமை வரை முன்பதிவு செய்யலாம்.
  2. மேல் விவரங்களுக்கு, 62985771என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

ஸ்ரீ சிவன் கோயில்

  1. அருகம்புல் அர்ச்சனை, மோதக அர்ச்சனை மற்றும் நாளிகேர கணபதி அர்ச்சனை செலுத்த விரும்புவோர், காலை 6:30 மணி முதல் காலை 11:30 மணி வரை மற்றும் மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை கோயில் அலுவலகத்திலிருந்து சீட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.
  2. 31.08.22, காலை 10:00 மணி முதல், பால் குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  3. கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால் குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்த முடியும்.
  4. மேல் விவரங்களுக்கு, 67434566 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில்

  1. அருகம்புல் அர்ச்சனை மற்றும் மோதக அர்ச்சனை செலுத்த விரும்புவோர், காலை 7:30 மணி முதல் காலை 11:30 மணி வரை மற்றும் மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை கோயில் அலுவலகத்திலிருந்து சீட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.
  2. 31.08.22, காலை 10:30 மணி முதல், பால் குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
  3. கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால் குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்த முடியும்.
  4. மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

 

The event is finished.

Date

ஆக 31 2022
Expired!

Time

All Day