HEB-ஆசிரமம்
கண்ணோட்டம்
1999-ஆம் ஆண்டில், ‘SCORE’ எனப்படும் சிங்கப்பூர் மறுவாழ்வுத் தொழில்நிறுவன அமைப்பின் உதவியுடன், இந்து அறக்கட்டளை வாரியம், ‘இந்து அறக்கட்டளை வாரியம் – ஆசிரமம்’ என்ற அமைப்பை நிறுவியது. இந்திய மற்றும் சீக்கிய போதைப் புழங்கிகள் மறுவாழ்வு பெற்று, சமுதாயத்தில் மீண்டும் ஒருங்கிணைவதற்கான ஓர் இடைநிலை மறுவாழ்வு இல்லம் இது. ஆசிரமத்தின் ஆதரவு மிகுந்த சூழலில், அதன் குடியிருப்பாளர்களுக்கு பலதரப்பட்ட தரமான திட்டங்களின் வழி, உணர்வுப்பூர்வமான, ஆன்மீக ரீதியான வழிகாட்டுதல் கிடைக்கிறது. அவர்கள் நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கான திறன்களையும் பெற ஆசிரமம் துணைபுரிகிறது. ஆசிரமத்தின் குடியிருப்பாளர்கள், அவர்கள் பின்பற்றும் மதம் பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கான வகுப்புகளுக்குச் செல்ல ஊக்குவிக்கப்படுகிறார்கள். மேலும், அவர்கள் தங்களது மனதையும் உடலையும் மேலும் கட்டுப்படுத்துவதற்காக, யோகாசனம், தியானம் முதலான வகுப்புகளுக்குச் செல்லவும் ஊக்கம் அளிக்கப்படுகிறது.
சிக்கனமாக இருப்பதற்கான வழிமுறைகள் கற்றுக்கொடுக்கப்படுவதுடன், அவர்கள் இல்ல அடிப்படையிலான வேலைகளில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படுகின்றன. முன்னால், SCORE என்று அழைக்கப்பட்ட Yellow Ribbon அமைப்பின் பணியமர்த்தும் பிரிவு, ஆசிரமத்தின் குடியிருப்பாளர்களுக்கு ஏற்புடைய வேலைகளைப் பெற்றுத் தர உதவுகின்றது, அங்கீகாரம் பெற்ற பொதுநல அறக்கொடை அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்து அறக்கட்டளை வாரிய – ஆசிரமம் அதன் தொலைநோக்கு சிந்தைக்கு ஈடாக, சமூகத்தைச் சென்றடைந்து உதவ முனைகின்றது.
சின்னம்
இந்து அறக்கட்டளை வாரியம் – ஆசிரமத்தின் சின்னம், ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் நவீன வடிவமாகத் திகழ்கின்றது. ஆசிரமத்தையும் அதன் சித்தாந்தங்களையும் பிரதிநிதிக்கும் வகையில் சின்னம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அடிப்படையில், ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம், சுய மேம்பாட்டிற்கான உலகளாவிய மந்திரமாகப் போற்றப்பட்டு வருகிறது. சின்னம் இரண்டு வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது: ஆரஞ்சு, பழுப்பு சிவப்பு
ஆரஞ்சு நிறமானது சூரியனுடன் தொடர்புபடுத்தப்பட்டு, ஆக்கப்பூர்வமான எண்ணங்களையும், புதுப்பிக்கப்படும் வாழ்விற்கான நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றது.
பழுப்பு சிவப்பு நிறமானது, தைரியத்தையும் வலிமையையும் குறிக்கின்றது. ஆசிரமம் தமது குடியிருப்பாளர்கள் வாழ்க்கையின் தடைகளைக் கடந்து, வெற்றியடைவதற்காக வலியுறுத்தும் அடிப்படைப் பண்புகள் இவை.
ஒவ்வொரு தனிநபரும் தமது வாழ்க்கையில் புத்தம் புதிய பரிணாமத்தில் மீண்டும் தொடங்கும் வேலையில், சுய மேம்பாட்டிற்காக அளிக்கப்பெறும் வாய்ப்பையே, இச்சின்னம் எடுத்துக்காட்டுகிண்றது.
இலக்கு, தொலைநோக்கு சிந்தை, மதிப்புகள்
இலக்கு
தொலைநோக்கு சிந்தை
பங்காளிகள், சமூகம் ஆகியோருடன் இணைந்து குற்றச்செயல் புரிபவர்களை, சமுதாயத்தில் மீண்டும் ஒருங்கிணையச் செய்வதில் அதிகபட்ச வெற்றியை அடைந்து, மறுவாழ்வு சிகிச்சை, பயிற்சி, ஆதரவு ஆகியவிற்றில் ஒரு முன்னணி அமைப்பாகத் திகழ்தல்
மதிப்புகள்
குடியிருப்பாளர்கள் மீதான கவனம்
எங்கள் குடியிருப்பாளர்களின் தனித்துவம் வாய்ந்த எதார்த்தங்களையும் தேவைகளையும் புரிந்துகொண்டு, அவர்கள் பற்றிய சித்தாந்தம், செயல்பாடுகள், சிந்தனைகள் ஆகியவற்றை அமைத்துக்கொண்டு, அவர்களது இலக்கு நோக்கிய வழிகாட்டுதலை அவர்களுக்கு அளித்தல்
குழு வேலை
சிங்கப்பூரில் குற்றச்செயல் புரிபவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பொதுவான இலக்கை எட்டும் பொருட்டு, குடியிருப்பாளர்கள், பங்காளிகள், சமூகம் ஆகியோருக்கு இடையில் தொடர்ந்து விறுவிறுப்பான சார்புடைத்தன்மையை ஊக்குவித்தல்
தரம்
எங்கள் குடியிருப்பாளர்களுக்கு மனவுறுதி அளிக்கும் நோக்கத்துடன், ஆக உயரிய மதிப்புமிக்க பராமரிப்பு, மறுவாழ்வு சேவைகளுக்கான தரநிலையை அடைய முனைதல்
மனித நேயம்
தாராள மனப்பான்மை, இரக்க சிந்தனை, ஆர்வம், மனிதத் தொடர்பு ஆகியவற்றை வலியுறுத்துதல்
நிர்வாகக் குழு
தலைவர்: | பேராசிரியர் N கணபதி |
---|---|
துணைத் தலைவர்: | திரு சின்னைய்யா குணசேகரன் |
செயலாளர்: | திரு V மகேந்திரன் |
பொருளாளர்: | திரு சிவராமகிருஷ்ணன் ராஜலிங்கம் |
உறுப்பினர்கள்: | திரு மதியா நல்லப்பன் திரு கணேசன் S/O மணியம் திரு S விஜயகுமார் குமாரி ரஞ்சலா பாலசந்திரன் குமாரி வைஜயந்தி மாலா திரு ராஜேஷ்பால் சிங் சந்து |