இந்து கோயில்களில் இரண்டாம் கட்ட (உயர்த்தப்பட்ட விழிப்புநிலை) நடைமுறைகள்
கடந்த நவம்பர் 20ஆம் தேதி, கொவிட்-19 அமைச்சுகள் நிலை பணிக் குழு பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் சில தளர்த்தப்படுவது குறித்து அறிவித்தது.
அறிவிக்கப்பட்ட சில தளர்வுகள் 22 நவம்பர் (திங்கள்) தேதி முதல் நடப்புக்கு வரும்.
ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், ஸ்ரீ சிவன் கோயில், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் ஆகிய இந்து அறக்கட்டளை வாரியத்தின் நிர்வாக மேற்பார்வையில் இயங்கும் கோயில்கள் கீழ்வரும் மாற்றங்களுக்கு இணங்க செயல்படும்.
- பிப்ரவரி 1 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை முதல், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே வாரத்தில் உள்ள எல்லா நாட்களிலும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். இது கோயிலின் பாதுகாப்பான பக்தர்கள் எண்ணிக்கை வரம்புகளுக்கு கட்டுப்பட்டு இருக்கும்.
- குழுவாக கோயிலுக்கு வந்தால், அதிகபட்சமாக ஐவர் மட்டுமே ஒரு குழுவில் இடம்பெற முடியும். குழுக்களிடையே 1 மீட்டர் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
- வழிபாட்டிற்குப் பிறகு, பக்தர்கள் உடனடியாக கோயிலிருந்து புறப்பட வேண்டும். இவ்வாறு செய்தால்தான், மற்றவர்களால் கோயிலுக்குள் நுழைய முடியும். கோயிலினுள் அமரவோ அல்லது மற்ற பூஜைகளை பார்வையிடவோ வேண்டாம் என பக்தர்களை கோயில் நிர்வாகம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது. இதனை பின்பற்றாவிட்டால், மற்றவர்கள் கோயிலுக்குள் நுழைய தாமதம் ஏற்படலாம்.
- முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 1,000 பேர் வரை வழிபாட்டுத் தல நிகழ்வுகளில் கலந்துகொள்ளலாம் என்ற தளர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளால், கோயில்களால் பெரிய எண்ணிக்கையில் பக்தர்களை அனுமதிக்க முடியாது. கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.
- சிறப்பு வழிபாடுகள், விழாக்களின் நேரலையை https://heb.org.sg/ எனும் இந்து அறக்கட்டளை வாரிய இணையப் பக்கத்தில் பார்வையிடலாம்.
- ‘டிரேஸ்டுகெதர்’ செயலி அல்லது சாதனத்தின் (டோக்கன்) பயன்பாட்டில் மட்டும்தான் கோயிலுக்குள் நுழைய முடியும்.
- எல்லா பக்தர்களையும் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். பதிவு செய்யவும் மேல் விவரத்திற்கும் https://www.vaccine.gov.sg/ என்ற இணையப் பக்கத்தை நாடலாம்.
இப்படிக்கு,
இந்து அறக்கட்டளை வாரியம்
(தகவல் பகிரப்பட்ட நாள்: 28 ஜனவரி 2022)