Sivadas-HEB உயர்கல்வி உபகாரச் சம்பளம்
கண்ணோட்டம்
Sivadas-HEB கல்வி நிதியம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த இந்து மாணவர்களுக்கு உயர்கல்வி நிதி உதவி அளிக்கிறது. மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கோ அல்லது கல்வி மானியத்திற்கோ விண்ணப்பிக்கலாம்.
இந்த உயர்கல்வி உபகாரச் சம்பளங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான விளம்பரங்கள் Straits Times நாளிதழிலும், HEB இணையதளத்திலும், HEB முகநூல் பக்கத்திலும் வெளியிடப்படும். உதவித் திட்டம் குறித்து மாணவர்களுக்குத் தெரிவிக்க அனைத்து அரசாங்க கல்வி நிறுவனங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் கடிதங்கள் அனுப்பப்படும்.
விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 21 2024 முதல் செப்டம்பர் 11 2024 வரை திறக்கப்படும்
தகுதி
விண்ணப்பிக்க தகுதி பெற, மாணவர்கள்:
- சிங்கப்பூர் குடிமக்களாகவோ அல்லது நிரந்தரவாசிகளாகவோ இருக்க வேண்டும்
- இந்துக்களாக இருக்க வேண்டும்
- மாதாந்திர வீட்டு தனிநபர் வருமானம் (மொத்த மாதாந்திர வீட்டு வருமானத்தை வீட்டிலுள்ள நபர்களின் எண்ணிக்கையால் வகுத்தால் வரும் வருமானம்) $1,900-ஐத் தாண்டக்கூடாது
கல்வி உதவித்தொகை
- கல்வி உதவித்தொகை சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் (PEI) பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த தனியார் கல்வி நிலையங்கள் Committee for Private Education (CPE)ஆல் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். முதல் Diploma அல்லது நன்முறையில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் முதல் பட்டத்திற்கு இந்த கல்வித்தொகை உதவும்.
- CPE ஆல் EduTrust Star or EduTrust (4 ஆண்டு விருது) பெற்ற கல்வி நிலையங்களில் கல்விபெறும் மாணவர்கள் மட்டுமே உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியும்.
- கொடுக்கப் படும் கல்வித்தொகை அதிகபட்சமாக உங்கள் கல்வி கட்டணத்தில் 50 விழுக்காடு அல்லது Sivadas-HEB கல்வி நிதிக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட தொகையாக இருக்கும்.
கல்வி மானியம்
- கல்வி மானியத்திற்கு தகுதிபெறும் மாணவர்கள்:
- NUS, NTU, SMU, SUSS, SUTD அல்லது SIT இல் முதல் இளங்கலை பட்டம் படிப்போர்
- Nanyang தொழில்நுட்பக்கல்லூரி, Ngee Ann பலதுரை தொழில்நுட்பக்கல்லூரி, Republic தொழில்நுட்பக்கல்லூரி, Singapore தொழில்நுட்பக்கல்லூரி, Temasek தொழில்நுட்பக்கல்லூரி அல்லது BCA கலைக்கூடம் ஆகியவற்றில் முதல் Diploma படிப்போர்
- LaSalle கலைக் கல்லூரியில் பொது நிதியளிக்கப்பட்ட Diploma திட்டம் அல்லது கலை பல்கலைக்கழகம் அல்லது
Nanyang நுன்கலை கல்லூரியில் படிப்போர். - கல்வி அமைச்சின் தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் (ITE) அனைத்து துறைகளிலும் படிப்போர்.
- கல்வி மானியம் ITE, Polytechnic அல்லது University மாணவர்களுக்கு ஒருமுறையே வழங்கப்படும். அதாவது, முன்னர் மானியம் பெற்ற விண்ணப்பதாரர்கள் அதே பிரிவின் கீழ் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது. அவர்கள் இப்போது வேறு கல்வி நிலையை எட்டியிருந்தால் விண்ணப்பிக்கலாம் (எடுத்துக்காட்டாக, ITE முடித்துவிட்டு Polyக்கு தகுதிபெற்றிருந்தால் ). மானியத் தொகை கல்விநிலையைப் பொறுத்து மாறுபடும்.
விண்ணப்பம்
சிவதாஸ் – இந்து அறக்கட்டளை வாரியம் உயர்கல்வி உதவி நிதிக்கான விண்ணப்பங்கள் 17.04.2024 முதல் தொடங்கும். இதற்காக காலக்கெடு 15.05.2024 வரை. தெரிவு செய்யப்படுவோர் காலக்கெடு தொடங்கி மூன்று வாரங்களுக்குள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படலாம்.
உதவிக்கு கீழ்வரும் அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம்:
திரு விவேக் | 6593 9205 / திருமதி சுமதி | 6593 9210
கீழே பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு வாரிய நடவடிக்கைகளுக்கும் நீங்கள் தன்னார்வத் தொண்டு செய்ய விரும்பினால், தொலைபேசியில் நிர்வாக மேலாளரைத் தொடர்பு கொள்ளவும்: 6296 3469 .
மாற்றாக, வாரியத்தால் நிர்வகிக்கப்படும் கோயில்களில் ஏதேனும் ஒரு சமய நிகழ்வுகள் அல்லது பண்டிகைகளுக்கு உங்கள் சேவைகளை வழங்க விரும்பினால், தயவுசெய்து கோயில்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
பின்வரும் பகுதிகளில் எங்களுக்கு உதவக்கூடிய நபர்களையும் நாங்கள் தேடுகிறோம். நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளும்போது, நீங்கள் ஆர்வமுள்ள பங்கேற்பு பகுதியைக் குறிக்கவும்:
தேசிய நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகளுக்கு: