ஸ்ரீ மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் 2023
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் மறுசீரமைப்பு மற்றும் பழமைப் பாதுகாப்புப் பணிகள் நிறைவுபெற்று விட்டன. இக்கோயிலின் மஹா கும்பாபிஷேகம், 12 பிப்ரவரி 2023 ஞாயிற்றுக்கிழமை காலை 7.25 மணி முதல் 9.15 மணிக்குள்ளாக நடைபெறும். பக்தர்கள் கும்பாபிஷேகம் தொடர்பான பூர்வாங்க சடங்குகளிலும் பூஜைகளிலும் மஹா கும்பாபிஷேகத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அன்னை ஸ்ரீ மாரியம்மனின் பூரண அருள் உங்களுக்குக் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.
நிகழ்வு சிற்றேடு
யாகசாலை பூஜைகள்: 07.02.2023 to 12.02.2023
மஹா கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் 7 பிப்ரவரி 2023 (செவ்வாய்) காலை 7 மணிக்குத் தொடங்கி, 12 பிப்ரவரி 2023, (ஞாயிறு) காலை 6.30 மணிக்கு நிறைவுபெறும். பக்தர்கள் 8 பிப்ரவரி 2023 முதல் 11 பிப்ரவரி 2023 காலை 9 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை அல்லது மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை யாகசாலை சங்கல்பத்தில் ஒரு குழுவாகவோ அல்லது தனியாகவோ பங்கேற்கலாம். யாகசாலை சங்கல்பத்துக்கான பங்கேற்புக் கட்டணம் $201. யாகசாலை பூஜையில் பங்கேற்பவர்களுக்கு ஒரு நினைவுப்பரிசும் பிரசாதமும் வழங்கப்படும்.
ரத்னயாசம்: 09.02.2023, 6.00am to 7.00pm
ரத்னயாசம் தினத்தன்று, சிறப்பாக தயாரிக்கப்பட்ட தங்கம் அல்லது வெள்ளித் தகடுகளை சன்னதி மேடைக் குழியில் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளாக காலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை வைக்கலாம். ஒரு தகட்டின் விலை $151. தங்கம் மற்றும் வெள்ளித் தகடுகளை சமர்ப்பிக்க விரும்பும் பக்தர்கள், கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்யலாம். இந்தச் சடங்கில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் கோயிலுக்கு நேரத்தோடு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
எண்ணெய் சாற்றுதல்: 10.02.2023, 6:00am to 7:00pm
தெய்வச் சிலைகளுக்கு எண்ணெய் சாற்றுதல் மகா கும்பாபிஷேகத்துக்கு முன் பக்தர்களுக்கு வழங்கப்படும் ஓர் அரிய வாய்ப்பாக கருதப்படுகிறது. இச்சடங்கு 10 பிப்ரவரி 2023 வௌ;ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நடைபெறும். இச்சடங்கில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் கோயிலுக்கு நேரத்தோடு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். காரணம், இச்சடங்குக்குப் பிறகு மேலும் பல சமய சடங்குகள் நடைபெறுவதால் இந்த வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
திருக்கல்யாண சீர்வரிசை: 12.02.2023, 7.00pm
மகா கும்பாபிஷேக தினத்தன்று மாலையில், ஸ்ரீவிஸ்வநாதர்-ஸ்ரீ விசாலாட்சி, ஸ்ரீ சுப்பிரமணியர்- ஸ்ரீ வள்ளி தெய்வானை, ஸ்ரீராமர்-ஸ்ரீசீதாதேவி ஆகிய தெய்வ இணையினருக்குச் சிறப்பு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். பக்தர்கள் திருக்கல்யாண சீர்வரிசையில் பங்கு கொள்ளலாம். திருக்கல்யாண சீர்வரிசை பொருட்களை கோயிலே வழங்கிவிடும். திருக்கல்யாண சீர்வரிசை பங்கேற்புக் கட்டணம் – $21
மண்டலாபிஷேகம்: 13.02.2023 to 01.04.2023
மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேக பூஜைகள் 13 பிப்ரவரி 2023 (திங்கள்) முதல் 1 ஏப்ரல் 2023 (சனி) வரை 48 நாட்களுக்கு மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும். அது 1 ஏப்ரல் 2023 (சனி) அன்று 108 கலசாபிஷேகத்துடன் நிறைவுபெறும். அன்றைய தினம் காலையில் அன்னை ஸ்ரீ மாரியம்மனுக்கு கலசாபிஷேகம் இடம்பெறும். பக்தர்கள் கூ21 கட்டணம் செலுத்தி கலசாபிஷேக சங்கல்பத்தில் பங்கேற்கலாம். ஸ்ரீ மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு கலசம் வழங்கப்படும்.
மஹா கும்பாபிஷேகம் தொடர்பான முக்கிய தகவல்கள் (12.02.23)
பார்வையாளர் இடங்கள்
ஆலயத்துக்குள் சேல்லுதல்
மஹா கும்பாபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் முடிந்தவுடன் பக்தர்கள் கோயில் ராஜகோபுரத்தின் வழியாக தரிசனத்துக்காக உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். கோயில் அதிகாரிகள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். மஹா கும்பாபிஷேக விழாவுக்குப் பக்தர்கள் பெருந்திரளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்கள் சில கால தாமதங்களை எதிர்பார்க்கலாம். கோயிலில் பாதணிகள் அணியக் கூடாது கோயிலுக்குள் நுழையும் பக்தர்கள் பாதணிகளை எடுத்துச் செல்ல பைகள் வழங்கப்படும்.
அன்னதானம்
காலை 9.00 மணி முதல் மேக்ஸ்வெல் (Maxwell) உணவங்காடி நிலையத்துக்கு எதிர்புறம் அமைக்கப்படும் கூடாரத்தில் அன்னதானம் பரிமாறப்படும். அன்னதான இடத்துக்குச் செல்லும் வழிகாட்டிப் பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும்.
சாலைகள் மூடல்
- மஹா கும்பாபிஷேகத்துக்காக பின்வரும் சாலைகள் 11 பிப்ரவரி 2023, சனிக்கிழமை, இரவு 11 மணி முதல் 12 பிப்ரவரி 2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை பொதுமக்களுக்கும் சாலைப் போக்குவரத்துக்கும் மூடப்பட்டிருக்கும். சவுத் பிரிட்ஜ் ரோட்டை நோக்கிச் செல்லும் எல்லா வாகனங்களும் 11 பிப்ரவரி 2023, சனிக்கிழமை, இரவு 11 மணி முதல் 12 பிப்ரவரி 2023, ஞாயிற்றுக்கிழமை, மாலை 6 மணி வரை க்ரோஸ் ஸ்திரீட்டில் (Cross Street) திருப்பி விடப்படும். பக்தர்கள் இந்த சாலை மூடல் தகவல்களைப் புரிந்துகொண்டு தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கும்பாபிஷேகத் தினமான 12 பிப்ரவரி 2023, ஞாயிற்றுக்கிழமை, காலை 6.45 மணி முதல் 7.00 மணிக்குள்ளாக கோயில் உள்ள பகுதிக்குள் பக்தர்கள் வந்துவிடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
-
- சவுத் பிரிட்ஜ் ரோடு
- முகம்மது அலி லேன்
- டெம்பிள் ஸ்திரீட்
- அங் சியாங் ஹில்
- எர்ஸ்கின் ரோடு
- ஸ்பிரிங் ஸ்திரீட்
- பாண்டா ஸ்திரீட்
பக்தர்கள் இறங்கும் இடங்கள்
- மஹா கும்பாபிஷேகத்திற்கு டாக்ஸி (Taxi) மற்றும் தனியார் வாடகை வாகனங்கள் மூலம் வரும் பக்தர்கள், பின்வரும் இடத்தில் இறங்கி, கோயிலுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- எம் என் டி (MND) கட்டிடத்திற்கு அருகில் உள்ள மேக்ஸ்வெல் ரோடு
- நீல் ரோடு
- தஞ்சோங் பகார் ரோடு
- நீயூ பிரிட்ஜ் ரோடு
- அப்பர் க்ரோஸ் ஸ்திரீட் @ சைனாடவுன் எம்ஆர்டி எக்சிட்(EXIT) “F”
- க்ரோஸ் ஸ்திரீட் (Cross Street) வழியாக க்ரோஸ் ஸ்திரீட் எக்ஸ்சேஞ்ச் (Cross Street Exchange)
வாகனம் நிறுத்தும் இடங்கள்
- எம் என் டி (MND) கட்டடம் மேக்ஸ்வெல் ரோடு(Maxwell Road)
- யூ ஆர்ஏ (URA) சென்டர் கிழக்குப் பகுதி
- பெக் சியா ஸ்திரீட்
- கியோங் செய்க் ஸ்திரீட்
- க்ரோஸ் ஸ்திரீட் எக்ஸ்சேஞ்ச்
- ஃபார் ஈஸ்ட் ஸ்குவேர்
- ஹோம் லிக் காம்பிளக்ஸ்
அருகிலுள்ள எம் ஆர்டி (MRT) நிலையம்
கும்பாபிஷேகத்தைக் காண வரும் பக்தர்கள் பார்வையாளர் பகுதிகளுக்குச் செல்ல, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் உள்ள மேக்ஸ்வெல் எம் ஆர்டி (MRT) நிலையத்தில் எக்சிட் (EXIT ) “1” மற்றும் எக்சிட் (EXIT) “3” ல் வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பேருந்துச் சேவைகள்
- 61, 80, 145, 166 மற்றும் 196 ஆகிய பேருந்து சேவைகள் 11 பிப்ரவரி 2023, இரவு 11.00 முதல் 12 பிப்ரவரி 2023, மாலை 6.00 மணி வரை சவுத் பிரிட்ஜ் சாலை, நீல் சாலை மற்றும் தஞ்சோங் பகார் சாலை வழியாக செல்லாது.
- மேலும் தகவலுக்கு, SBS டிரான்சிட் மற்றும் SMRT பேருந்துகளின் இணையதளத்தைப் பார்க்கவும்.
ஸ்ரீ மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் நேரலை
07.02.2023: ஸ்ரீ மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகளின் ஆரம்பம்
ஸ்ரீ மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்தின் முன் நிகழ்ச்சிகள்
- ஸ்ரீ மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் 2023 தொடர்பான முக்கிய நிகழ்ச்சிகள் HEB சமூக ஊடக தளங்கள் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன, மேலும் இந்த காணொளிகள் நிகழ்வுக்குப் பின் தொடர்ந்து கிடைக்கும்.
- ஸ்ரீ மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் தொடர்பான சமய சடங்குகளை https://www.youtube.com/hinduendowmentsboard அல்லது https://www.facebook.com/hinduendowmentsboard வழியாக நேரடியாக காணலாம்.