Gift from the Heart

இந்து அறக்கட்டளை வாரியம், ‘Gift from the Heart’ எனும் உதவித் திட்டத்தின் மூலம், உதவி தேவைப்படும் இந்துக் குடும்பங்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கி வருகின்றது. இத்திட்டம், 2009-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் போது, நிதிப் பிரச்சினைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் முதன்முதலில் தொடங்கப்பட்டது. உணவுப்பொருட்கள் பொட்டலமிடப்பட்டு, இந்து அறக்கட்டளை வாரியம் – ஆசிரமம் வாயிலாக விநியோகிக்கப்படுகின்றது. இந்து அறக்கட்டளை வாரியம்  – ஆசிரமம், வாரியத்தால் நிர்வகிக்கப்படும் அங்கீகாரம் பெற்ற பொதுநல அறக்கொடை அமைப்பு ஆகும். உதவி பெறுபவர்கள், இந்துக் கோயில்கள் வாயிலாக அடையாளம் காணப்படுகிறார்கள்.

இந்தச் சமூகத் திட்டத்தில் அங்கம் வகிக்க விரும்பும் நன்கொடையாளர்களை வாரியம் வரவேற்கிறது.

விண்ணப்பப் படிவங்களின் அச்சுப் பிரதிகள், இந்து அறக்கட்டளை வாரியத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட கோயில்களில் கிடைக்கப்பெறும்:

  1. ஸ்ரீ மாரியம்மன் கோயில் (சவுத் பிரிட்ஜ் ரோடு)
  2. ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் (சிராங்கூன் ரோடு)
  3. ஸ்ரீ சிவன் கோயில் (கேலாங் ஈஸ்ட்)
  4. ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் (தோ பாயோ)

மேல் விவரங்களுக்கு, தயவுசெய்து இந்து அறக்கட்டளை வாரியம் – ஆசிரமத்தைத் தொடர்புகொள்ளுங்கள்:

6753 9730

6753 3723

[email protected]

ஆண்டுதோறும் நடத்தப்படும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்களுக்கு தங்கள் சேவைகளை தன்னார்வத் தொண்டு செய்ய ஆர்வமுள்ள எவரையும் இந்து எண்டோவ்மென்ட் வாரியம் வரவேற்கிறது.

கீழே பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு வாரிய நடவடிக்கைகளுக்கும் நீங்கள் தன்னார்வத் தொண்டு செய்ய விரும்பினால், தொலைபேசியில் நிர்வாக மேலாளரைத் தொடர்பு கொள்ளவும்: 6296 3469 .

மாற்றாக, வாரியத்தால் நிர்வகிக்கப்படும் கோயில்களில் ஏதேனும் ஒரு சமய நிகழ்வுகள் அல்லது பண்டிகைகளுக்கு உங்கள் சேவைகளை வழங்க விரும்பினால், தயவுசெய்து கோயில்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

பின்வரும் பகுதிகளில் எங்களுக்கு உதவக்கூடிய நபர்களையும் நாங்கள் தேடுகிறோம். நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளும்போது, நீங்கள் ஆர்வமுள்ள பங்கேற்பு பகுதியைக் குறிக்கவும்:

தேசிய நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகளுக்கு:

உணவு விநியோகம்

தளவாடங்கள்

பாதுகாப்பு

மார்ஷலிங்